azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 04 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 04 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

You see a plane zooming in the sky; someone tells you that it is flown by a pilot, but you refuse to believe it because you do not see him from where you are. Is this correct? You must go into the plane to see the pilot; you cannot deny his existence, standing on the ground. You have to guess that the plane must have a pilot. So too seeing the Universe, you have to guess the existence of God, not deny Him because you are not able to see him. People do not believe in God, but they believe in newspapers and the news they publish about things they do not see or cannot see. They believe what their ears hear, more than what their eyes see or minds experience. People argue and discuss, at the slightest mention of God. They think they are superior enough for that. The Divine can be known only by those who know the signs, the characteristics, and the special excellences, through a study of the scriptures. Do not cast aspersions against the path of God or against the Divine. (Divine Discourse, Feb 19, 1966)
The Universe is seen; it can be learnt about; it can be experienced and enjoyed. But, God is unseen. He has to be inferred through His handiwork. - Baba
நீங்கள் வானத்தில் ஒரு விமானம் பறப்பதைக் காண்கிறீர்கள்; அது ஒரு விமானியால் இயக்கப்படுகிறது என்று யாரோ ஒருவர் உங்களிடம் கூறுகிறார், ஆனால் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து விமானியைப் பார்க்க முடியாததால், நீங்கள் அதை நம்ப மறுக்கிறீர்கள். இது சரியா? விமானியைப் பார்க்க நீங்கள் விமானத்திற்குள் செல்ல வேண்டும்; நீங்கள் தரையில் நின்றுகொண்டு, அவர் இருப்பதை மறுக்க முடியாது. விமானத்தில் ஒரு விமானி இருக்கத்தான் வேண்டும் என்று நீங்கள் ஊகிக்க வேண்டும். அதைப்போலவே, பிரபஞ்சத்தைப் பார்க்கும்போது, இறைவன் இருப்பதை நீங்கள் ஊகிக்கத்தான் வேண்டும்; நீங்கள் அவரைப் பார்க்க முடியாது என்பதால் அவரை மறுக்கக்கூடாது. மக்கள் இறைவனை நம்புவதில்லை, ஆனால் அவர்கள் பார்க்காத அல்லது பார்க்க முடியாத விஷயங்களை வெளியிடும் செய்தித்தாள்களையும் செய்திகளையும் நம்புகிறார்கள். அவர்கள் தங்கள் கண்களால் பார்ப்பதை விட அல்லது மனம் அனுபவிப்பதை விட, தங்கள் காதுகள் கேட்பதையே நம்புகிறார்கள். இறைவனைப் பற்றி சற்று குறிப்பிட்டாலே, மக்கள் வாதிக்கவும், விவாதிக்கவும் முற்படுகிறார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் உயர்ந்தவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். மறை நூல்களை படிப்பதன் மூலம், இறைவனுடைய அடையாளங்கள், குணாதிசயங்கள், சிறப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டவர்களால் மட்டுமே தெய்வீகத்தை அறிய முடியும். தெய்வீகப் பாதையின் மீதோ, தெய்வத்தின் மீதோ அவதூறுகளை சுமத்தாதீர்கள். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 19, 1966)
பிரபஞ்சம் கண்களுக்குப் புலப்படுகிறது; இதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்; இதை உணரவும், அனுபவித்து மகிழவும் முடியும். ஆனால், இறைவன் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. அவனுடைய படைப்பின் கைவண்ணத்தைக் கொண்டே அவனை உய்த்துணர வேண்டும். - பாபா