azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 01 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 01 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Look upon your body as a moving temple. Wherever you go, God is with you. Do not indulge in debates over what is God and where is God. God has to be experienced through faith and confidence. Where there is confidence, there is Love. Where there is Love, there is Peace. Where there is Peace, there is Truth. Where there is Truth, there is Bliss. Where there is Bliss, there is God. Bliss is everywhere. The bliss that is in you is limited by your body-consciousness. You must extend that bliss and make it all-embracing. When a child is born, he is a lone individual. As he grows, he has a wife and children. When the children get married the kinships get wider. This widening of relationships occurs within a single family. You have to widen your outlook and expand it to cover the entire human family! (Divine Discourse, Feb 17, 1989)
Once you get rid of body consciousness, you will experience the vast expanse of the Universal Cosmic Consciousness which is all-pervasive. - Baba
உங்கள் உடலை ஒரு நடமாடும் ஆலயமாகக் கருதுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் இறைவன் உங்களோடு இருக்கிறான். இறைவன் என்றால் என்ன, அவன் எங்கே இருக்கிறான் என்ற விவாதங்களில் ஈடுபடாதீர்கள். இறைநம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையின் மூலமாகத்தான் இறைவனை அனுபவிக்க வேண்டும். தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில் ப்ரேமை இருக்கும். ப்ரேமை இருக்கும் இடத்தில், சாந்தி இருக்கும். சாந்தி இருக்கும் இடத்தில், சத்தியம் இருக்கும். சத்தியம் இருக்கும் இடத்தில், ஆனந்தம் இருக்கும். ஆனந்தம் இருக்கும் இடத்தில் ஆண்டவன் இருப்பான். ஆனந்தம் எங்கும் நிறைந்துள்ளது. உங்களுக்குள் இருக்கும் ஆனந்தம், உங்களுடைய உடலுணர்வின் வரம்புக்குள் மட்டுமே இருக்கிறது. இந்த ஆனந்தத்தை மேலும் விரிவடையைச் செய்து, அனைத்தையும் அரவணைக்குமாறு செய்யுங்கள். ஒரு குழந்தை பிறக்கும்போது, அவன் தனிப்பட்ட ஒருவனாக இருக்கிறான். அவன் வளர்ந்த பிறகு, அவனுக்கு மனைவி, மக்கள் இருக்கிறார்கள். அவனுடைய குழந்தைகளுக்கு திருமணம் ஆகும்போது, உறவுகள் மேலும் விரிவடைகின்றன. ஒரு குடும்பத்திலேயே இந்த உறவுகள் இவ்வளவு விரிவடையும்போது, உங்கள் கண்ணோட்டத்தை மேலும் விரிவுபடுத்தி மனித குடும்பம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் நீங்கள் அதை விசாலமாக்க வேண்டும்! (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 17, 1989)
உடல் மீதான பற்றுணர்வில் இருந்து நீங்கள் விடுபட்டவுடன், எங்கும் நிறைந்துள்ள பிரபஞ்ச பேருணர்வின் விசாலத் தன்மையை நீங்கள் உணர்வீர்கள். - பாபா