azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 25 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 25 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

You have no right to call yourselves messengers of God if your actions are bad, your thoughts are evil and you preach wrong ideas. Such persons can only be called agents of the devil. From today, "as messengers of God," you must demonstrate to the world purity, truth and love that the Divine symbolises. When you lead a life of purity and morality, you are entitled to regard yourselves as "Sons of God”. God is the embodiment of love and you shouldn’t do anything contrary to the love that God represents. You should develop good qualities which can make you worthy "sons of God”. In the Bible, it is recorded that Jesus washed the feet of His disciples. When they asked him why He was doing so, Jesus answered: "I am washing your feet as your servant, so that you may learn to serve the world." Every man is, to begin with, a messenger of God. When he fulfils his duties as a messenger, he realises that he is a son of God and then achieves oneness with the Divine. (Divine Discourse, Dec 25, 1984)
Remember that whomsoever you may serve, you are serving God. - Baba
உங்கள் செயல்கள் மோசமாக இருந்தால், உங்கள் எண்ணங்கள் தீயதாக இருந்தால், நீங்கள் தவறான கருத்துக்களை போதிப்பதாக இருந்தால் நீங்கள் ‘இறைவனின் தூதர்கள்’ என்று சொல்லிக்கொள்ள உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அத்தகைய நபர்களை சாத்தானின் கையாட்கள் என்றே அழைக்க முடியும். இன்றுமுதல், ‘இறைவனின் தூதர்களாக’, தெய்வீகத்தின் அடையாளமான பரிசுத்தம், சத்தியம், ப்ரேமை ஆகியவற்றை நீங்கள் உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும். நீங்கள் பரிசுத்தமாகவும் ஒழுக்கமாகவும் வாழும்போது, ‘இறைவனின் மகன்கள்’ என்று உங்களைக் கருதுவதற்கு நீங்கள் தகுதி படைத்தவர்களாக ஆகிறீர்கள். இறைவன் ப்ரேமையின் திருவுருவம்; இறைவனின் இலக்கணமாக இருக்கும் ப்ரேமைக்கு மாறாக நீங்கள் எதையும் செய்யக்கூடாது. உங்களை ‘இறைவனின் மகன்கள்’ என்ற தகுதிக்கு ஏற்றவர்களாக ஆக்கும் நற்குணங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பைபிளில், இயேசு தம் சீடர்களின் பாதங்களைக் கழுவியதாக சொல்லப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறு செய்கிறார் என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்டபோது, "உங்களுடைய சேவகனாக நான் உங்கள் பாதங்களைக் கழுவுகிறேன், அதனால் நீங்கள் உலகிற்குச் சேவை செய்யக் கற்றுக்கொள்ளலாம்" என்று பதிலளித்தார். ஒவ்வொரு மனிதனும், முதலில், இறைவனின் தூதனே. அவன் ஒரு தூதனாக தனது கடமைகளை நிறைவேற்றும்போது, தான் இறைவனின் மகன் என்பதை உணர்ந்து, பின்னர் தெய்வீகத்துடனான ஏகத்துவத்தை அடைகிறான். (தெய்வீக அருளுரை, டிசம்பர் 25, 1984)
நீங்கள் யாருக்கு சேவை செய்தாலும், இறைவனுக்கே சேவை செய்கிறீர்கள் என்பது நினைவிருக்கட்டும். - பாபா