azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 23 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 23 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Today in this Kali yuga, while the currents of contradiction and controversy are undermining faith and adoration, the good fortune that has brought you face to face with Me is something for which you must thank your merit won through many lives. This is no ordinary good fortune. This incarnation is moving with you in order to console, encourage and cure. This relationship is something unique; it has to be kept unbroken until the goal is reached. I have no wish to draw people towards Me, away from the worship of My other names and forms. You may infer from what you call My miracles, that I am causing them to attract and to attach you to Me, and Me alone. They are not intended to demonstrate or publicise; they are merely spontaneous and concomitant proofs of Divine Majesty. I am yours; you are Mine, forever and ever. What need is there for attracting and impressing, for demonstrating your Love or My compassion? I am in you; you are in Me. There is no distance or distinction. (Divine Discourse, Nov 23, 1968)
The closeness between our hearts is such that it is not going to come to an end. Keep the essence of Sai in your heart. - BABA
இன்று இக்கலியுகத்தில், இறைநம்பிக்கை மற்றும் ஆராதனையை முரண்பாடுகள், சர்ச்சைகள் ஆகியவை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கும்போது, உங்களை என் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய அதிர்ஷ்டத்திற்காக, பல பிறவிகளில் நீங்கள் ஈட்டிய புண்ணியத்திற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். இது வெறும் சாதாரண அதிர்ஷ்டம் அல்ல. இந்த அவதாரம், உங்களுக்கு ஆறுதல் அளித்து, ஊக்கமூட்டி, குணப்படுத்துவதற்காக உங்களுடன் பழகிக் கொண்டிருக்கின்றது. இந்த உறவு தனிச்சிறப்பு வாய்ந்தது; குறிக்கோளை அடையும் வரை இதை முறியாமல் வைத்திருக்க வேண்டும். என்னுடைய மற்ற நாமரூபங்களை வழிபடுவதை விட்டுவிட்டு, மக்களை என் பக்கம் இழுப்பதில் எனக்கு எந்த விருப்பமுமில்லை. ‘என் அற்புதங்கள்’ என்று நீங்கள் சொல்வதை, உங்களை ஈர்த்து என்னுடன் மட்டுமே உங்களை இணைத்துக் கொள்வதற்காக நான் செய்கிறேன் என நீங்கள் நினைக்கலாம். அவை காட்சிக்காகவோ விளம்பரத்திற்காகவோ அல்ல; அவை தெய்வீக மகிமையின் இயல்பு மற்றும் பிரமாணமே. என்றென்றைக்கும் நான் உங்களுடையவன்; நீங்கள் என்னுடையவர்கள். ஈர்ப்பதற்கும், கவர்வதற்கும், உங்கள் ப்ரேமை அல்லது என் கருணையை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? நான் உங்களுள் இருக்கிறேன்; நீங்கள் என்னுள் இருக்கிறீர்கள். இங்கு இடைவெளியோ வேறுபாடோ எதுவுமில்லை. (தெய்வீக அருளுரை, நவம்பர் 23, 1968)
நம் இதயங்களுக்கு இடையே உள்ள நெருக்கம் முடிவே இல்லாத ஒன்றாகும். சாயியின் தத்துவத்தை உங்கள் இதயத்தில் கொண்டிருங்கள். - பாபா