azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 15 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 15 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Some people say that they have not got any benefit in spite of chanting the divine name for twenty to thirty years. No benefit accrues from chanting the divine name if the mind is filled with impurities. First, purify your mind and fill it with positive feelings. Only then you can experience the benefit of chanting the divine name. At least from today onwards, cultivate noble feelings. Talk sweetly and softly. You cannot always oblige, but you can always speak obligingly. Embodiments of Love! On the New Year Day, it is a practice to mix sweet, sour and bitter things and eat them. It is to indicate that joy and sorrow have to be treated with equanimity. It is the tongue that tastes the delicacy and it is the heart that tastes love. The taste of love is peerless. It is sweeter than even nectar. Love alone can match love. God is love, love is God. Live in love. Whatever bhajans you sing, sing with love. God is Bhavapriya. He sees your feelings, not the rhythm or tune. If your feelings are pure, God will take care of everything! (Divine Discourse, Apr 14, 1999)
A heart devoid of love is no better than a body without life. Love is life. Love is God. - BABA
இருபது முப்பது வருடங்களாக இறை நாமத்தை ஜபித்தும் பலன் ஏதும் கிடைக்கவில்லை என்று சிலர் கூறுகின்றனர். மனதில் அசுத்தங்கள் நிறைந்திருந்தால், இறைநாமத்தை ஜபிப்பதால் எந்தப் பலனும் கிடைக்காது. முதலில், உங்கள் மனதைத் தூய்மைப்படுத்தி, நேர்மறையான உணர்வுகளால் நிரப்புங்கள். அப்போதுதான் இறைநாமத்தை உச்சரிப்பதன் பலனை அனுபவிக்க முடியும். இன்றிலிருந்தாவது நல்உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இனிமையாகவும் இதமாகவும் பேசுங்கள். உங்களால் எப்போதும் உதவ இயலாது; ஆனால் நீங்கள் எப்போதும் இதமாகப் பேசலாமே? ப்ரேமையின் திருவுருவங்களே! புத்தாண்டு தினத்தில் இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்பான பொருட்களைக் கலந்து சாப்பிடுவது வழக்கம். சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. நாக்கு ருசியான உணவை சுவைக்கிறது; இதயம் ப்ரேமையைச் சுவைக்கிறது. ப்ரேமையின் சுவை ஈடுஇணையற்றது. அது அமிர்தத்தையும் விட இனிமையானது. ப்ரேமை மட்டுமே ப்ரேமைக்கு இணையாக முடியும். இறைவனே ப்ரேமை, ப்ரேமையே இறைவன். ப்ரேமையில் வாழுங்கள். நீங்கள் எந்த பஜனையைப் பாடினாலும் ப்ரேமையுடன் பாடுங்கள். இறைவன் பாவப்பிரியன். அவன் உங்கள் உணர்வுகளைப் பார்க்கிறான், ராக, தாளங்களை அல்ல. உங்களுடைய உணர்வுகள் பரிசுத்தமாக இருந்தால், இறைவன் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வான்! (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 14, 1999)
ப்ரேமையற்ற இதயம் உயிரற்ற உடலை விட மேலானதல்ல. ப்ரேமையே வாழ்க்கை. ப்ரேமையே இறைவன்.