azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 01 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 01 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Just as soap is necessary to make this external body clean, repetition of the divine name, meditation, and remembrance (smarana) are needed to clean the interior mind. Just as food and drink are needed to keep the body strong, contemplation of the Lord and meditation on the Atma are needed to strengthen the mind. Without this food and drink, the mind will just totter this way and that. As long as the waves are agitating the top, the bottom cannot be seen. When the waves of desire agitate the waters of the mind, how can one see the base, the Atma? The tottering causes the waves and is caused by want of food and drink. So, clean the mind with contemplation of the Lord. Feed it with meditation on the Atma. Only meditation and spiritual practice (sadhana) can clean the depths of the mind and give it strength. Without purity and strength, the Atma recedes into the distance and peace flees. (Dhyana Vahini, Ch 5)
Cleanse your mind of the temptations and tenets of ignorance; make it free from dust, so that God may be reflected therein. – Baba
புறஉடலைச் சுத்தமாக்குவதற்கு சோப்பு எப்படி அவசியமோ, அதேபோல, அக மனதைச் சுத்தப்படுத்த ஜபம், தியானம், ஸ்மரணம் ஆகியவை தேவை. உடலை வலுவாக வைத்துக்கொள்ள உணவும் நீரும் தேவைப்படுவது போல, மனதை வலுப்படுத்த இறைசிந்தனையும், ஆத்ம தியானமும் தேவை. இந்த உணவும், நீரும் இல்லையென்றால், மனம் அங்கும், இங்கும் அலைபாயும். நீரின் மேற்பரப்பில் அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் வரை, அடித்தளத்தைக் காண முடியாது. ஆசை அலைகள் மனதின் நீரைக் கலக்கிக் கொண்டிருக்கும் வரை,அடித்தளமான ஆத்மாவை ஒருவர் எவ்வாறு பார்க்க முடியும்? தடுமாற்றம்தான் அலைகளை உண்டாக்குகிறது, மேலும் உணவு மற்றும் நீரின் பற்றாக்குறையாலும் ஏற்படுகிறது. எனவே, இறைசிந்தனையின் மூலம் மனதைத் தூய்மைப்படுத்துங்கள். அதற்கு ஆத்மதியானம் எனும் உணவை ஊட்டுங்கள். தியானமும், ஆன்மிக சாதனையும்தான் மனதின் ஆழத்தைத் தூய்மைப்படுத்தி அதற்கு வலுவூட்ட முடியும். தூய்மையும் வலிமையும் இல்லையென்றால், ஆத்மதரிசனம் தூரமாகிவிடுகிறது, சாந்தியும் பறந்தோடிவிடுகிறது. (தியான வாஹினி, அத்தியாயம்-5)
அறியாமையின் கவர்ச்சிகள் மற்றும் கோட்பாடுகளை மனதிலிருந்து நீக்கித் தூய்மைப்படுத்துங்கள். இறைவன் அதில் பிரதிபலிப்பதற்கு ஏற்ப அதை தூசியற்றதாக ஆக்குங்கள். - பாபா