azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 30 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 30 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Today, thanks to the influence of the Kali Age, two kinds of diseases have grown. One is the insatiable thirst for wealth. In every city, there is a mad rush for making money. Everyone is caught up in this craze. No doubt money is necessary, but only up to a limit to meet one's needs. Owing to excessive desire people lose all sense of proportion. Men turn into demons in the pursuit of wealth. It may be asked whether at least they make good use of their immense wealth. No, ultimately, the money may fall in the hands of robbers or others. What you get from society, give it back to society. That is the primary value to be cherished by everyone. The second malady is the thirst for power. Afflicted with these two maladies, man is converting the whole world into a madhouse. The desire for wealth and power is not wrong as such. But wealth and power should be used for the right ends. Whatever position you occupy, see that it is used worthily. (Divine Discourse, Apr 7, 1997)
You must realise that whatever scriptures one may master or whatever power and wealth one may acquire, without love one cannot achieve liberation. – Baba
இன்று கலியுகத்தின் தாக்கத்தால் இரண்டு வகையான நோய்கள் வளர்ந்துள்ளன. ஒன்று, செல்வத்தின் மீது தீராத தாகம். ஒவ்வொரு நகரத்திலும், பணம் சம்பாதிப்பதில் வெறித்தனமான வேகம் காணப்படுகிறது. எல்லோரும் இந்த மோகத்தில் சிக்கிக் கொண்டுள்ளார்கள். பணம் தேவை என்பதில் சந்தேகமில்லை, ஆனால், அது ஒருவருடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு மட்டுமே இருக்க வேண்டும். அதீத ஆசையின் காரணமாக எது முக்கியம், எது முக்கியமில்லை எனும் உணர்வு அனைத்தையும் மக்கள் இழந்துவிடுகின்றனர். செல்வத்தைத் தேடுவதில் மனிதர்கள் பேய்களாக மாறி விடுகிறார்கள். குறைந்தது தங்கள் பெரும் செல்வத்தை நல்ல முறையிலாவது பயன்படுத்துகிறார்களா என்ற கேள்வி எழலாம். அதுவும் இல்லை; இறுதியில், அந்தப் பணம் கொள்ளையர்கள் அல்லது மற்றவர்களின் கைகளை சென்றடையலாம். நீங்கள் சமுதாயத்தில் இருந்து எதைப் பெறுகிறீர்களோ, அதை சமுதாயத்திற்குத் திருப்பிக் கொடுங்கள். இது அனைவராலும் போற்றப்பட வேண்டிய முதன்மையான பண்பாகும். இரண்டாவது நோய், அதிகார மோகம். இந்த இரண்டு நோய்களாலும் பீடிக்கப்பட்ட மனிதன் உலகம் முழுவதையும் ஒரு பைத்தியக்கார வீடாக மாற்றிக்கொண்டு இருக்கிறான். செல்வத்திற்கும் அதிகாரத்திற்கும் ஆசைப்படுவது தவறல்ல. ஆனால் செல்வமும் அதிகாரமும் சரியான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், அவை சரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யுங்கள். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 7, 1997)
மறைநூல்கள் எதைக் கற்றுத் தேர்ந்திருந்தாலும், பதவி, செல்வம் என எதைப் பெற்றிருந்தாலும், ப்ரேமையின்றி ஒருவர் மோக்ஷத்தை அடைய முடியாது. - பாபா