azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 29 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 29 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

The Lord is everyone’s Father, in whose property everyone can claim a share. But in order to get it, you must reach a certain standard of intelligence and discrimination. The infirm and imprudent may not be considered fit to receive this property. His property is Grace, Pure Love. If you have discrimination and renunciation, you can claim your share, as a right! Bring devotion and lay it here and take from here spiritual strength! The more such business is done, the more pleased I am! Bring what you have, your sorrows and griefs, worries and anxieties, and take from Me joy and peace, courage and confidence. In My view, there is no seniority or juniority among devotees. Mother spends more time tending to the sickly child. She asks the older children to look after themselves, but feeds the infant with her own hand. That does not mean that she has no love for the grown-ups! So too, do not think that because I do not ostensibly pay more attention to one person, that person is beyond the ken of my Prema. (Divine Discourse, Mahashivaratri, 1955)
Just as the son is the rightful heir to the father’s property, man has equal claim to God’s property of love, truth, forbearance, peace, and empathy. - Baba
இறைவன் அனைவரின் தந்தையாவான்; அவனுடைய சொத்தில் ஒவ்வொருவரும் தம் பங்கிற்கு உரிமை கோரலாம். ஆனால் அதைப் பெறுவதற்கு, நீங்கள் அறிவுத்திறன் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றின் ஒரு குறிப்பிட்ட தரத்தை அடைந்திருக்க வேண்டும். பலவீனமானவர்கள் மற்றும் விவேகமற்றவர்கள் இந்தச் சொத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்களாகக் கருதப்படமாட்டார்கள். அவனது சொத்து இறையருளே, பரிசுத்தமான ப்ரேமையே. உங்களுக்கு விவேகமும், வைராக்யமும் இருக்குமானால், உங்களுடைய பங்கை நீங்கள் உரிமையுடன் கோர முடியும்! பக்தியை இங்கு அர்ப்பணித்து, ஆன்மிக சக்தியை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்! அத்தகைய வியாபாரம் எந்த அளவிற்கு செய்யப்படுகிறதோ, நான் அந்த அளவிற்கு மகிழ்ச்சியடைகிறேன்! உங்களிடம் உள்ள துக்கங்கள்-துயரங்கள், கவலைகள்-ஏக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள், என்னிடமிருந்து சாந்தி-சந்தோஷம், தைரியம்-நம்பிக்கை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். என் பார்வையில் பக்தர்களிடையே சீனியர் ஜுனியர் என்பதெல்லாம் கிடையாது. நோய்வாய்ப்பட்ட குழந்தையைப் கவனித்துக்கொள்வதில் தாய் அதிக நேரம் செலவிடுகிறாள். மூத்த குழந்தைகளை தங்களைத் தாங்களைக் கவனித்துக் கொள்ளும்படி அவள் கூறுகிறாள், ஆனால் பச்சிளம் குழந்தைக்கு தன் கையாலேயே உணவூட்டுகிறாள். அதனால், மூத்த குழந்தைகளின் மேல் அவளுக்கு அன்பு இல்லை என்று அர்த்தமல்ல! அதே போல, நான் ஒருவரின் மீது அதிக கவனம் செலுத்தாதது போல இருந்தால், அந்த நபர் என் ப்ரேமை வட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நினைக்க வேண்டாம். (தெய்வீக அருளுரை, மஹாசிவராத்திரி, 1955)
தந்தையின் சொத்துக்கு உரிமையுள்ள வாரிசாக மகன் இருப்பது போல், இறைவனின் சொத்தாகிய ப்ரேமை, சத்யம், சகிப்புத்தன்மை, சாந்தி மற்றும் பச்சாதாபம் ஆகியவற்றிற்கு மனிதனுக்கு சம உரிமை உள்ளது. - பாபா