azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 21 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 21 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Each student is like a petromax light. This light has to be kept burning by the act of pumping kerosene (fuel) from time to time. And the soot has to be cleaned now and then by a pin. It needs kerosene too. Only when all the three are present, the light will burn brightly. Your shraddha (earnest devotion) is the kerosene. Your love is the pin. Your spirit of sacrifice is the pump. In addition, a wick is needed. That wick is the Lord's name. With the aid of the three accessories, when you chant Lord's name, your devotion will shine effulgently! This effulgence is the light of the Divine within you. You proceed from peacelessness to Param-Jyoti (Divine Light in your heart), through peace and an illumined mind. The heart of everyone is the seat of the Lord. Students should cultivate discriminating faculty through education, cherish humility and foster faith in the Divine. This is the royal road to the realisation of oneness with the Divine. (Divine Discourse, Feb 03, 1994)
Academic education has its uses. But it’s not the summum bonum of life. – Baba
ஒவ்வொரு மாணவனும் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு போன்றவன். அவ்வப்போது மண்ணெண்ணெயை (எரிபொருள்) பம்ப் செய்வதன் மூலம் இந்த விளக்கை எரிந்துகொண்டு இருக்குமாறு செய்ய வேண்டும். அடைத்துக்கொண்டிருக்கும் கரியை ஊசியைக் கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். விளக்கு எரிவதற்கு மண்ணெண்ணெயும் தேவை. இம்மூன்றும் இருந்தால்தான் விளக்கு பிரகாசமாக எரியும். உங்களுடைய சிரத்தை (ஆத்மார்த்தமான பக்தி) தான் மண்ணெண்ணெய். உங்களுடைய ப்ரேமையே ஊசியாகும். உங்களுடைய தியாக உணர்வே பம்ப் ஆகும். இதைத்தவிர, ஒரு வலைத்திரியும் தேவைப்படுகிறது. அந்த வலைத்திரி இறைவனுடைய திருநாமமே. மூன்று உபகரணங்களின் துணையுடன் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கும்போது, உங்கள் பக்தி ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்! இந்தப் பிரகாசம் உங்களுள் இருக்கும் தெய்வீக ஜோதியே. சாந்தி மற்றும் தெளிவடைந்த மனதின் மூலம், நீங்கள் அசாந்தியிலிருந்து பரம்-ஜோதிக்கு (உங்கள் இதயத்தில் உள்ள தெய்வீக ஜோதி) செல்கிறீர்கள். ஒவ்வொருவரின் இதயமும் இறைவனின் இருப்பிடமே. மாணவர்கள், கல்வியின் மூலம் பகுத்தறியும் திறனை வளர்த்துக்கொண்டு, பணிவைப் பெற்று, இறைநம்பிக்கையைப் பேணிக் காக்க வேண்டும். இதுவே இறைவனுடனான ஏகத்துவத்தை உணர்வதற்கான ராஜபாட்டையாகும். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 3, 1994)
அறிவுசார்ந்த கல்விமுறையால் பயன்கள் உண்டு. ஆனால் அக்கல்வியே வாழ்வின் முழுமையும் உன்னதக் குறிக்கோளும் அல்ல. - பாபா