azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 19 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 19 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

With the help of the mind, man can rise from the level of the human to the highest level of Divinity. But he can also descend to the animal nature or demonic level. Once you turn the mind towards worldly objects it tends to become animal and demonic in nature. If the mind is turned upwards towards God and freed from the thought process, it tends to merge with Nirguna Nirakara and thus become liberated. The most important reason for bondage is giving too much freedom to the mind. For example, when an animal is tethered to a post, it will not be able to go to another place and spoil it. It will not be able to show anger or violence or do harm to any person. But if it is let loose, then it can roam over various fields, destroy the crops and cause loss and harm to others. It also gets beaten for the mischief done by it. Similarly, one’s mind must be bound by certain regulations and limits. (Divine Discourse, Feb 17, 1985)
IF YOU WANT TO BE MASTERS AND NOT SLAVES, YOU SHOULD
KEEP YOUR BODY, SENSES AND MIND UNDER YOUR CONTROL. - BABA
மனதின் உதவியால் மனிதநிலையில் இருந்து மிக உயர்ந்த தெய்வநிலைக்கு மனிதன் உயர முடியும். ஆனால் அவன் மிருகம் அல்லது அசுர நிலைக்குக் கூட தாழ்ந்து விட முடியும். நீங்கள் மனதை உலகியலான விஷயங்களை நோக்கித் திருப்பிவிட்டால், அது மிருகமாக அசுரத்தன்மை கொண்டதாக ஆகிவிடுகிறது. சிந்தனை ஓட்டத்திலிருந்து மனதை விடுவித்து இறைவன்பால் திருப்பிவிடப்பட்டால், அது நிர்குண, நிராகார பரம்பொருளோடு இரண்டறக் கலந்து மோக்ஷத்தை அடைகிறது. பந்தத்திற்கு மிக முக்கியமான காரணம் மனதிற்கு அளவுக்கதிகமான சுதந்திரத்தை அளிப்பதுதான். உதாரணமாக, ஒரு விலங்கை ஓரிடத்தில் கட்டி வைத்தால், அது மற்றொரு இடத்திற்குச் சென்று நாசப்படுத்த முடியாது. எவர் மீதும் கோபாவேசத்தைக் காட்டவோ யாருக்கும் தீங்கு இழைக்கவோ முடியாது. ஆனால், அதைக் கட்டவிழ்த்துவிட்டால், பல நிலங்களில் அலைந்து திரிந்து, பயிர்களை நாசம் செய்து, மற்றவர்களுக்கு நஷ்டத்தையும், துன்பத்தையும் ஏற்படுத்தும். அது செய்த தவறுக்காக அடியும் வாங்கும். அதைப் போலவே, ஒருவருடைய மனமும் சில கட்டுப்பாடுகளுக்கும், வரைமுறைகளுக்கும் உட்பட்டுத்தான் இருக்க வேண்டும். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 17, 1985)
நீங்கள் அடிமையாக இல்லாமல் எஜமானனாக இருக்க வேண்டுமானால், உங்களுடைய உடல், புலன்கள் மற்றும் மனதை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். - பாபா