azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 17 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 17 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Just as a baby, after learning to watch and understand, tries to toddle here and there at home, so also the spiritual aspirant learns to toddle in the inner world and understands it. A healthy baby in the cradle waves its arms and legs in glee and lisps in joy watching the lamp on the wall. Similarly, the spiritual aspirant, also healthy in body, mind and soul, lying in the cradle of life, watches the inner world and claps the hands ceaselessly in great glee at that inner joy. This has to be done. Besides, every thought, every word, and every deed has to proceed from the full consciousness of knowledge. Direct your intelligence not to wander about but to dwell constantly in the inner world! This is the inward quest, and meditation is the most important instrument needed for this. The spiritual aspirant can enter the inner quest through the gate of self-examination. That gate accords welcome into the highest and holiest status possible in life to every aspirant who is endowed with humility and devotion. (Dhyana Vahini, Ch 3.)
ENJOY THE TASTE OF DIVINITY WITHIN.DEVELOP INNER VISION
AND VISULAISE YOUR TRUE SELF- BABA
எவ்வாறு ஒரு பச்சிளங்குழந்தை பார்ப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகு, வீட்டிற்குள் அங்கும் இங்கும் தளிர்நடை பயில முயற்சிக்கிறதோ அதைப்போல, ஆன்மிக சாதகரும் அக உலகில் தளிர்நடை பயில்வதற்கு கற்றுக்கொண்டு அதைப் புரிந்து கொள்கிறார். தொட்டிலில் இருக்கும் ஒரு ஆரோக்கியமான குழந்தை, சுவற்றில் உள்ள விளக்கைப் பார்த்து, கை கால்களை உதைத்துக் கொண்டு ஆனந்தக் கூச்சலிடுகிறது. அதே விதமாக, உடல், மனம் மற்றும் ஆத்ம ஆரோக்கியத்துடன் கூடிய சாதகரும், வாழ்க்கை எனும் தொட்டிலில் படுத்துக்கொண்டு, அக உலகைக் கண்டு அந்த உள்ளார்ந்த ஆனந்தத்தில் இடையறாது கைகளைத் தட்டிக் களிப்படைகிறார். இவ்வாறு செய்தே ஆக வேண்டும். மேலும், ஒவ்வொரு சிந்தனை, சொல் மற்றும் செயலும் முழுமையான அறிவுணர்விலிருந்து வெளிப்பட வேண்டும். உங்களுடைய புத்தியை அங்கும் இங்கும் திரியவிடாமல், இடையறாது அக உலகில் ஆழ்ந்திருக்கச் செய்யுங்கள்! இதுவே அகத்தேடுதல்; இதற்குத் தேவையான மிக முக்கியமான கருவி தியானமாகும். ஆத்ம பரிசோதனை எனும் வாயிலின் வழியாக ஆன்மிக சாதகர் அகத்தேடுதலுக்குள் நுழைய முடியும். பயபக்தியுடைய ஒவ்வொரு சாதகருக்கும், வாழ்க்கையின் உயர்ந்த, பவித்ரமான பதவியை அளிப்பதற்கு இந்த வாயில் வரவேற்பளிக்கிறது. (தியான வாஹினி, அத்தியாயம்-3)
உள்ளுறையும் தெய்வீகத்தை ருசித்து மகிழுங்கள்; அகப்பார்வையை வளர்த்துக்கொண்டு ஆத்ம தரிசனம் செய்யுங்கள். – பாபா