azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 10 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 10 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Purposefully directing attention on a subject and fixing it there is one-pointedness (ekagrata). This is also a condition of the mind. Concentration and one-pointedness help to focus effort on any selected task. Concentration is essential for all. It’s the foundation of all successful endeavours. It’s needed not only for meditation but even for worldly affairs and ordinary living. Whatever task one’s engaged in, doing it with concentration will develop both self-confidence and self-respect, for they are the results of the attitude of one’s own mind. The mind may lean on either bad or good, that’s why concentrated attention must be employed to keep the mind attached only to good promptings. Success or failure in good tasks depend upon one-pointedness. One-pointedness will increase power and skill. But it cannot be won without conquering the worldly cravings that distract the mind. This one-pointedness, this conquest of the mind, is acquired by the exercise of meditation. (Dhyana Vahini Ch.3)
MEDITATION GIVES CONCENTRATION AND SUCCESS IN ALL TASKS. - BABA
ஒரு விஷயத்தின் மீது குறிப்பிட்ட நோக்கத்துடன் கவனத்தைச் செலுத்தி அதில் மனதை நிலைகொள்ளச் செய்வதே ஒருமுகமுனைப்பு (ஏகாக்ரதா) ஆகும். இதுவும் மனதின் ஒரு நிலைதான். மனக்குவிப்பும், ஒருமுகமுனைப்பும் தேர்ந்தெடுக்கப்படும் எந்தப்பணியிலும் கவனத்துடன் செயலாற்ற உதவுகிறது. மனக்குவிப்பு அனைவருக்கும் அத்தியாவசியமானது. அதுவே எல்லா வெற்றிகரமான முயற்சிகளுக்கும் அஸ்திவாரம் போன்றதாகும். இது தியானத்திற்கு மட்டுமல்லாது, உலகியலான விஷயங்கள் மற்றும் சாதாரண வாழ்க்கைக்கும் கூட அவசியமே. ஒருவர் எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும், அதை மனக்குவிப்புடன் செய்வது தன்னம்பிக்கை மற்றும் சுயகௌரவம் என்ற இரண்டையும் அபிவிருத்தி செய்யும்; ஏனெனில் இவை ஒருவரது மனப்பாங்கின் பலன்களே. மனம் நல்லவை அல்லது கெட்டவையின் பக்கம் சாயக்கூடும்; அதனால்தான், மனம் நல்ல உந்துதல்களுடன் மட்டுமே இணைந்திருப்பதற்கு ஆழ்ந்த கவனத்தை பயன்படுத்த வேண்டும். நற்பணிகளின் வெற்றி, தோல்வி மனதின் ஒருமுகமுனைப்பைப் பொறுத்தே இருக்கிறது. இந்த ஏகாக்ரதா, சக்தி-சாமர்த்தியங்களை அதிகரிக்கும். ஆனால், மனதைச் சிதறடிக்கும் உலகியலான ஆசைகளை வெல்லாமல், ஒருமுகமுனைப்பைப் பெற முடியாது. இந்த ஒருமுகமுனைப்பு மற்றும் இந்த மனோநாசனத்தை தியானத்தின் மூலமே பெற முடியும். (தியான வாஹினி, அத்தியாயம்-3)
தியானம் அனைத்து பணிகளிலும் மனக்குவிப்பையும்
வெற்றியையும் அளிக்கிறது. - பாபா