azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 09 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 09 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Repeat Soham (I am He), with every breath: 'So' when you inhale and 'ham', when you exhale, 'So' means He and 'ham’, means I. When you complete inhalation and exhalation, feel that 'So' (Lord), and 'ham', (you) are One. Later, after long practice, the idea of He and I as two separate entities will disappear and there will be no more “So” and “Ham”. Those sounds will be reduced to “O” and “M”, and it becomes “Om” (Pranava). Repeat that sound afterwards with every breath and that will save you from bondage to birth and death; this is Pranavopasana (contemplation on Pranava) recommended in Vedas. This Soham-recitation is a good means of restraining the mind from running away with you. Let the mind be ever attached to the Lord; then, it will not flee, as it fancies, towards all directions. That is the meaning of the exhortation of Krishna: "Sarvadharman parityajya mam ekam sharanam vraja - Giving up all other activities, surrender fully to Me." Place the mind completely at His service. Then, He will save you from fall! (Divine Discourse,May 22,1965)
USE THE TONGUE TO RECITE THE NAME OF THE LORD; USE THE FEET TO GO ON PURE AND HOLY ERRANDS; USE THE HEART TO CONTAIN PURE THOUGHTS AND FEELINGS. - BABA
ஒவ்வொரு மூச்சுடனும் ஸோஹம் (நான் இறைவனே) என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்: மூச்சை உள்ளிழுக்கும்போது ‘ஸோ’ என்றும், மூச்சை வெளிவிடும்போது ‘ஹம்’ என்றும் கூறுங்கள்; ‘ஸோ’ என்றால் இறைவன், ‘ஹம்’ என்றால் நான். மூச்சை உள்ளிழுத்து, வெளிவிட்ட பிறகு, ‘ஸோ’ என்ற இறைவனும், ‘ஹம்’ என்ற நீங்களும் ஒன்றே என உணருங்கள். பின்னர், நீண்ட பயிற்சிக்குப் பிறகு, இறைவனும் நானும் வெவ்வேறானவர்கள் என்ற எண்ணம் மறைந்துவிடும்; ‘ஸோ’ மற்றும் ‘ஹம்’ என்பதே இருக்காது. அந்த ஒலிகள் ‘ஓ’ மற்றும் ‘ம்’ ஆகக் குறைந்து, அது ‘ஓம்’ (பிரணவம்) ஆகிவிடும். அதன் பிறகு, அந்த ஒலியை ஒவ்வொரு மூச்சுடனும் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்; அது உங்களை பிறப்பு, இறப்பு என்ற பந்தத்திலிருந்து விடுவிக்கும்; இதுவே, வேதங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ப்ரணவோபாஸனை (ப்ரணவத்தை தியானிப்பது) ஆகும். இந்த ஸோஹம்-பாராயணம் மனதை உங்களுடன் சேர்ந்து தறிகெட்டு ஓடாமல் தடுக்கும் ஓர் சிறந்த முறையாகும். மனம் எப்போதும் இறைவனுடன் இணைந்திருக்கட்டும்; பின்னர், அது தான்தோன்றித்தனமாக எல்லாத் திசைகளிலும் ஓடாது. இதுவே கிருஷ்ணரின் உபதேசமான “ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ - மற்ற எல்லா செயல்பாடுகளையும் துறந்து என்னிடம் முழுமையாக சரணடைவாயாக" என்பதன் பொருளாகும். மனதை இறைவனது சேவையில் பரிபூரணமாக அர்ப்பணித்து விடுங்கள். பின்னர், நீங்கள் வீழ்ந்துவிடாமல் அவன் காத்திடுவான். (தெய்வீக அருளுரை, மே 22, 1965)
நாவை இறைநாமஸ்மரணைக்கும், பாதங்களை பரிசுத்தமான, புனிதமான இடங்களுக்குச் செல்வதற்கும், இதயத்தை தூய சிந்தனைகள் மற்றும் உணர்வுகளைக் கொண்டிருப்பதற்கும் பயன்படுத்துங்கள். - பாபா