azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 07 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 07 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

It is very necessary to train the mind to be always pleasant. The waters of a river leap from mountains, fall into valleys, and rush through gorges; tributaries join at various stages, and the waters become turbid and unclean. So too, in the flood of human life, speed and power increase and decrease. These ups and downs might happen at any moment during life. No one can escape them. They may come at the beginning of life, at the end, or perhaps in the middle. So, one has to convince oneself firmly that life is necessarily full of ups and downs and that, far from being afraid and worried over them, one should welcome them as adding to one’s experience. One should not only feel like this, but should also be happy and glad with whatever happens! Then, all troubles, whatever their nature, will pass away lightly and quickly. For this, the temper of the mind is essential. (Dhyana Vahini, Ch 3)
Living is either pleasant or unpleasant, depending upon one’s basic attitude toward life. - Baba
மனம் எப்போதும் இனிமையாக இருப்பதற்கு பயிற்சி அளிப்பது மிகவும் அவசியமாகும். நதியின் நீர் மலைகளிலிருந்து எழுந்து, பள்ளத்தாக்குகளில் விழுந்து, சமவெளிகளில் பாய்ந்து ஓடுகிறது; வெவ்வேறு இடங்களில் பல உபநதிகள் அதனுடன் இணைகின்றன; மேலும் அது கலங்கலாகவும், அசுத்தமாகவும் ஆகிவிடுகிறது. அதேபோல மனித வாழ்க்கை எனும் நீரோட்டத்திலும் அதன் வேகமும் சக்தியும் அதிகரிக்கவும், குறையவும் செய்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள் வாழ்க்கையின் எந்தத் தருணத்திலும் நிகழக்கூடும். யாரும் இவற்றிலிருந்து தப்ப முடியாது. இவை வாழ்க்கையின் ஆரம்பத்திலோ, முடிவிலோ அல்லது ஒருவேளை இடையிலோ வரக்கூடும். எனவே, வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது என்பதை ஒருவர் திடமாக ஏற்றுக்கொண்டு, அவற்றைக் குறித்து அச்சமோ, கவலையோ கொள்வதற்குப் பதிலாக, தனக்கு புதிய அனுபவங்களைச் சேர்க்க வருபவை என்று அவற்றை வரவேற்க வேண்டும். ஒருவர் இவ்வாறு கருதுவதோடு மட்டுமல்லாது, எது நிகழ்ந்தாலும் ஆனந்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும்! பின்னர் அனைத்து துன்பங்களும் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் எளிதாகவும், விரைவாகவும் கடந்து சென்றுவிடும். இதற்கு பக்குவப்பட்ட மனநிலை அத்தியாவசியம். (தியான வாஹினி, அத்தியாயம்-3)
ஒருவர் வாழ்க்கையை அடிப்படையில் எவ்வாறு நோக்குகிறார் என்பதைப் பொறுத்து அந்த வாழ்க்கை இனிமையானதாகவோ இனிமையற்றதாகவோ அமைகிறது. - பாபா