azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 05 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 05 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

To describe anything in words is difficult; it might even cause boredom. But to demonstrate it by deeds is easier and more pleasant! To make people understand by doing meditation is better than by talking about it! My writing on it and your reading it will not make it easy. Through meditation, people reach the divine experience of realising the Atma within themselves. Through meditation, spiritual aspirants are able to cast off sheaths of ignorance, layer after layer. They withdraw their sense perceptions from contact with worldly objective experiences. The process that aims at this holy consummation deserves to be called meditation. For this process, one must be equipped with good habits, discipline, and high ideals. One must be full of renunciation toward worldly things and their attractions. Whatever the situation, one should conduct oneself with enthusiasm and joy. Whatever is done must be dedicated not for the eking out of a livelihood but for earning Atmic bliss (Atma-ananda)! (Dhyana Vahini, Ch 2)
UTILISE YOUR INTELLIGENCE AND THOUGHTS FOR ACHIEVING THAT BLISS THAT COMES FROM LEADING A LIFE OF RIGHTEOUSNESS AND GOODNESS. - BABA
எதையும் வார்த்தைகளால் வர்ணிப்பது கஷ்டமாக இருப்பதோடு, அலுப்பு தட்டவும் செய்யலாம். அதை செயலில் காட்டுவது மிக சுலபமானது, ஆனந்தம் அளிக்கக்கூடியது! தியானத்தைப் பற்றி பேசுவதைவிட, அதை செய்து காட்டி மக்களுக்குப் புரியவைப்பது சிறந்தது. நான் அதைப் பற்றி எழுதுவதாலோ, நீங்கள் அதைப் படிப்பதாலோ, அதை சுலபமாகத் தெரிந்து கொள்ள முடியாது. மக்கள் தியானத்தின் மூலம் தங்களுள் இருக்கும் ஆத்மாவை உணரும் திவ்யானுபவத்தைப் பெறுகிறார்கள். தியானத்தின் மூலம் அறியாமையின் அடுக்குகளை ஒன்றன்பின் ஒன்றாக ஆன்மிக சாதகர்களால் நீக்கிவிட முடிகிறது. அவர்கள் உலக அனுபவங்களுடனான புலன்களது தொடர்பை விலக்கிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட புனிதமான நிலையை அடைய முற்படும் முறையே தியானம் எனக் கூறத் தகுந்ததாகும். இதற்கு ஒருவர், நற்பழக்கங்கள், நியமங்கள் மற்றும் உயர்லட்சியங்கள் கொண்டவராக இருக்க வேண்டும். உலக விஷயங்கள் மற்றும் அவற்றின் கவர்ச்சிகள் மீது பற்றற்றவராக இருக்க வேண்டும். எந்த சந்தர்ப்பமானாலும், உற்சாகம் மற்றும் ஆனந்தத்துடன் நடந்து கொள்ள வேண்டும். எதைச் செய்தாலும், அதனை வாழ்க்கை நடத்துவதற்காக அல்லாது ஆத்மானந்தத்தைப் பெறுவதற்காக அர்ப்பணிக்க வேண்டும். (தியான வாஹினி, அத்தியாயம்-2)
தார்மீகமான, நேர்மையான வாழ்க்கை நடத்துவதிலிருந்து கிடைக்கும் ஆனந்தத்தைப் பெறுவதற்கு உங்களுடைய அறிவாற்றல் மற்றும் சிந்தனைகளைப் பயன்படுத்துங்கள். – பாபா