azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 03 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 03 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Until the goal of meditation is achieved, the well-established discipline of sitting postures (asanas) has to be followed. The curriculum has to be adhered to till then. After attainment of the goal — that is, after mind (manas) and the intellect (buddhi) have been conquered and brought under control — one can be immersed in meditation wherever one finds oneself: on the bed, in a chair, on rocks, or in a cart. Once you learn to ride a motorcycle, you can ride on any road and under all conditions. But when you are just learning to ride, for your own safety and for the safety of those around you, you have to select an open parade ground. And you have to follow certain principles of balance; this is essential. So too, those who engage in meditation (sadhana) have to follow a certain course of training. No change can be made in this. (Dhyana Vahini Ch 2)
YOU MUST SUBJECT YOURSELF TO THE HAMMER OF DISCIPLINE AND
THE CHISEL OF PAIN-PLEASURE SO THAT YOU BECOME DIVINE. - BABA
தியானத்தின் இலக்கை எட்டும்வரை, நன்கு நிர்ணயிக்கப்பட்ட அமரும் முறைகளை (ஆசனங்கள்) அனுசரித்தே ஆக வேண்டும். அதுவரை, அதன் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இலக்கை எட்டியபிறகு, அதாவது மனமும், புத்தியும் வெல்லப்பட்டு நம் வசமானபின், படுக்கையிலோ, நாற்காலியிலோ, பாறையின் மீதோ அல்லது ஒரு வண்டியிலோ என எங்கிருந்தாலும், ஒருவர் தியானத்தில் ஆழ்ந்திருப்பது சாத்தியமே. மோட்டார் சைக்கிளை நீங்கள் ஓட்டக் கற்றுக்கொண்ட பிறகு, அதை உங்களால் எந்தப் பாதையாக இருந்தாலும் அதில் ஓட்டிச்செல்ல முடியும். ஆனால், அதை ஓட்டுவதற்கு கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது, உங்களுடைய மற்றும் பிறரது பாதுகாப்பை உத்தேசித்து ஒரு திறந்தவெளி மைதானத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் வண்டி ஓட்டும்போது சமநிலையாக இருப்பதற்கு சில கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அத்தியாவசியமாகும். அதேபோல, தியான சாதனையை மேற்கொள்பவர்கள் நிர்ணயிக்கப்பட்ட விதிகளை அனுசரித்தே ஆக வேண்டும். இதில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது. (தியான வாஹினி, அத்தியாயம்-2)
உங்களை நீங்கள் ஒழுக்கம் எனும் சுத்தியல் மற்றும் இன்ப-துன்பம் எனும் உளியால் செதுக்கிக்கொண்டு நீங்கள் இறைநிலையை அடைய வேண்டும். - பாபா