azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 01 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 01 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Shivaratri is a reminder to all mankind of the goal of mind-control. The Moon is the presiding deity of the mind, according to the sages, and even modern science has discovered a subtle relationship between the vagaries of the mind and the phases of the Moon. In the dark half of the month, the Moon is seen less and less as the days move forward, and symbolically it may be inferred that the mind too is undergoing a process of decline. This day is the 14th night and there is very little left of the Moon to influence the earth or the mind of man. A spurt of spiritual effort by way of the vigil, bhajan (congregational chant) and fasting done on this ratri (night) or period of ignorance, will result in the extinction of the mind and therewith the conquest of all the tendencies and attitudes which it has entangled man in. Thus this ratri can be sublimated into the heavenly splendour of Shiva.(Divine Discourse, Feb 16,1977)
THE SPIRITUAL PATH IS THE PATH OF DETACHMENT,
OF SENSE CONTROL, AND OF RIGOROUS MIND TRAINING. - BABA
சிவராத்திரி என்பது மனிதகுலம் அனைத்திற்கும் மனக்கட்டுப்பாட்டின் குறிக்கோளை நினைவூட்டுவதாகும். முனிவர்களின் கூற்றுப்படி, சந்திரனே மனதின் அதிபதி; நவீன விஞ்ஞானமும் கூட மனதின் சஞ்சலங்களுக்கும், சந்திரனின் நிலைகளுக்கும் இடையே உள்ள நுட்பமான தொடர்பைக் கண்டறிந்துள்ளது. தேய்பிறையின்போது, நாட்கள் போகப்போக நிலவு தேய்ந்துகொண்டே வருகிறது; மனமும் கூட தேய்ந்துகொண்டே வருவதை இது குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளலாம். இன்று 14ம் நாள் இரவு; பூமி அல்லது மனிதனுடைய மனதின் மீது நிலவு தன் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு மிகக்குறைவான அளவுதான் மிஞ்சியுள்ளது. அறியாமையைக் குறிக்கும் இந்த இரவில், விழித்திருத்தல், பஜனை மற்றும் உபவாசம் போன்ற ஆன்மிக சாதனைகளை தீவிரமாக செய்வது, மனதை அழிப்பதற்கும், அதன் மூலம் அது மனிதனை சிக்கவைத்திருக்கும் அனைத்து உந்துதல்கள் மற்றும் மனோபாவங்களை வெல்வதற்கும் வழிவகுக்கும். இவ்வாறு இந்த ராத்திரியை அருள்ஒளிமயமான சிவராத்திரியாக மாற்ற முடியும். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 16, 1977)
ஆன்மிகப் பாதை என்பது பற்றின்மை, புலனடக்கம் மற்றும் தீவிர மனப்பயிற்சி ஆகியவற்றின் பாதையாகும். - பாபா