azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 24 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 24 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Most people now follow only the passionate, restless (rajasic) and dull, ignorant (tamasic) paths in repeating the Divine Name and meditation. However, the very intention of repeating the Divine Name and meditation is to purify the mind and the intellect. In order to achieve this, the first path of pure and serene (satwic) meditation is best. When the mind and the intellect become pure, they will shine with the splendour of the understanding of the Atma. He in whom this understanding shines fully is called a sage (rishi). The knower of Atma becomes the Atma itself (Brahmavid Brahmaiva bhavati). The goal of life, that which makes life worthwhile, is the understanding of the Atma or, in other words, the basis of the individual soul (jiva). (Dhyana Vahini, Ch.2)
GOD ALONE IS THE GIVER OF LIFE, THE GUARDIAN OF LIFE, AND THE GOAL OF LIFE. - BABA
பெரும்பாலான மனிதர்கள் ஜப தியானங்களில் ராஜஸிக மற்றும் தாமஸிக மார்க்கங்களையே பின்பற்றுகிறார்கள். ஆனால், ஜப தியானங்களின் குறிக்கோள் மனம் மற்றும் புத்தியை நிர்மலமாக்குவதுதான். இதை அடைவதற்கு முதல் மார்க்கமான ஸாத்விக தியானமே மிகவும் உத்தமமானதாகும். மனமும், புத்தியும் நிர்மலமாகும்போது உணர்வுநிலை எனும் ஒளியால் அப்படிப்பட்டவர்களின் ஆத்மா பிரகாசிக்கும். எவரிடம் இந்த உணர்வுநிலை பரிபூரணமாகப் பிரகாசிக்கிறதோ அவரே ரிஷி என அழைக்கப்படுகிறார். ஆத்மாவை உணர்ந்தவர் ஆத்மாவாகவே ஆகிவிடுகிறார் (ப்ரம்மவித் ப்ரம்மைவ பவதி). ஜீவனின் ஆதாரமான ஆத்ம உணர்வு நிலையை அடைவதுதான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் குறிக்கோளாகும். (தியான வாஹினி, அத்தியாயம்-2)
வாழ்வை அளிப்பவன், வாழ்வை காத்து ரட்சிப்பவன்,
வாழ்வின் இலட்சியம் இறைவன் மட்டுமே. – பாபா