azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 16 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 16 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

The Lord has endowed you with all His wealth and Divine potentialities. You are inheritors of this wealth. You have to discover what that wealth is. Sai's wealth is pure, selfless and boundless Love. This is the truth. It is not the edifices you see that are Sai's wealth. You must inherit this Love, fill yourselves with it and offer it to the world. This is your supreme responsibility as Sai devotees. What is it that you can offer to the Lord who is omnipotent, omnipresent and all-knowing? The various things you offer to God are given out of delusion. Can the Lord Who permeates the Universe be confined in a temple? What lamp can you light for The One who has the effulgence of a billion suns? His truth is beyond the comprehension of Brahma and Hara. How can others comprehend Him? What name can be given to The One who is all things? What food can you offer to The One who holds the cosmos in His stomach? (Divine Discourse, Nov 23,1986)
PRACTICE THE VOCABULARY OF LOVE – UNLEARN THE
LANGUAGE OF HATE AND CONTEMPT. - BABA
இறைவன் உங்களுக்குத் தனது அனைத்து செல்வங்களையும் தெய்வீக சக்திகளையும் அளித்துள்ளான். இந்த செல்வத்தின் வாரிசுகளே நீங்கள். இந்த செல்வம் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தன்னலமற்ற, நித்ய நிர்மல ப்ரேமையே சாயியின் செல்வம். இதுவே நிஜம். சாயியின் செல்வம் நீங்கள் இங்கு காணும் கட்டிடங்களோ ஆலயங்களோ அல்ல; நீங்கள் இந்த ப்ரேமையின் வாரிசுகளாக, ப்ரேமையை அனுபவித்து உலகிற்கு வழங்குங்கள். இது சாயி பக்தர்களாகிய உங்களின் தலையாய கடமையாகும். எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த இறைவனுக்கு நீங்கள் எதை அளிக்க முடியும்? நீங்கள் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பல்வேறு பொருட்கள் மாயையின் காரணமாக அளிக்கப்படுபவை. பிரம்மாண்டமான ப்ரபஞ்சம் முழுதும் வியாபித்திருக்கும் இறைவனை ஒரு ஆலயத்திற்குள் அடைத்து வைக்க முடியுமா? கோடானுகோடி சூரியனின் ஒளிபடைத்த இறைவனுக்கு முன் எந்த தீபத்தை ஏற்ற முடியும்? இறைவனின் சத்தியம் பிரம்மனும் சிவனும் கூடப் புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டது; மற்றவர்கள் அவரை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? சர்வ ஜீவராசிகளிலும் சஞ்சரிக்கும் இறைவனை எந்தப் பெயரிட்டு அழைக்க முடியும்? அண்டசராசரங்களையும் வயிற்றில் அடக்கி வைத்துள்ள இறைவனுக்கு எந்த உணவைப் படைக்க முடியும்? (தெய்வீக அருளுரை, நவம்பர் 23, 1986)
ப்ரேமையெனும் சொற்களஞ்சியத்தைப் பழகி பயின்றிடுங்கள்; வெறுப்பு-அவமதிப்பு எனும் மொழியை மனதில் இருந்து அகற்றிடுங்கள். - பாபா