azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 14 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 14 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

You become devoted to God for your own sake. Whatever the name or form in which you worship the Lord, He will respond. He is the provider of everything, who fulfills every wish. Whether the devotee is one in distress or craving for some object, or a seeker or a Jnani (one of wisdom), God responds according to the measure of one’s devotion. Embodiments of the Divine! To realise the Divine, Love is the easiest path. Just as you can see the moon only with the light of the moon, God, who is the Embodiment of love, can be reached through love. Regard love as your life-breath. Love was the first quality to emerge in the creative process. All other qualities came after it. Therefore, fill your hearts with love and base your life on it! (Divine Discourse, Nov 23,1986)
LOVE IS THE SEED OF LOVE; IT IS ALSO THE BRANCHES, FLOWERS AND FRUIT.
TO ENJOY THE FRUITS, ONE MUST PRACTICE LOVE. - BABA
நீங்கள் உங்களுடைய சொந்த நலனுக்காகவே இறைவனிடம் பக்தி கொள்கிறீர்கள். எந்த நாம, ரூபத்தில் நீங்கள் இறைவனை ஆராதித்தாலும் அவன் அருள் புரிவான். அவன் எல்லாவற்றையும் அளித்து, ஒவ்வொரு விருப்பத்தையும் பூர்த்தி செய்பவன். பக்தன் துயரத்தில் வாடுபவனாக, ஏதோ ஒரு பொருளை யாசிப்பவனாக, இறைவனையே நாடுபவனாக, ஞானியாக, எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனது பக்திக்கு ஏற்ப இறைவன் அருள்பாலிக்கின்றான். தெய்வீகத்தின் திருவுருவங்களே! இறைவனை அடைவதற்கு ப்ரேமையே மிகவும் சுலபமான மார்க்கமாகும். நிலவின் ஒளியை மட்டும் கொண்டு உங்களால் எப்படி நிலவைக் காணமுடிகிறதோ, ப்ரேமையின் திருவுருமான இறைவனை ப்ரேமையின் மூலமாக அடைய முடியும். ப்ரேமையை உங்களுடைய உயிர்மூச்சாகக் கருதுங்கள். ப்ரேமையே சிருஷ்டியின் போது முதன்முதலில் தோன்றிய குணமாகும். மற்ற அனைத்து குணங்களும் அதன் பிறகு தோன்றியவையே. எனவே உங்களுடைய இதயங்களை ப்ரேமையால் நிரப்பிக்கொண்டு, உங்கள் வாழ்க்கையை அதன் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுங்கள்! (தெய்வீக அருளுரை, நவம்பர் 23, 1986)
ப்ரேமையின் விதை ப்ரேமையே. அதன் கிளைகளும், பூக்களும், பழங்களும் கூட ப்ரேமையே. அதன் பழங்களை அனுபவிப்பதற்கு, ஒருவர் ப்ரேமையைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். - பாபா