azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 10 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 10 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

As a result of meditation on the highest Atma (Paramatma), the mind will withdraw from sense objects and the sensory world. Just at that time, the intellect (buddhi) must assert its authority and command the mind not to entertain any feeling except the thoughts of the Fundamental Basis. When its basic truth is known, the mind will not be deluded by the evanescent, untrue, and unblissful. Instead, it will welcome the blossoming of joy, happiness, and truth, and it will not be affected by sorrow and grief. One’s life assumes a new splendour when one visualises and realises bliss in the awareness of the Supreme Reality (Satchidananda) through mind and intellect (manas and buddhi) that is purified and transformed by meditation. The taste of the fruit is evident when the whole fruit is eaten with no portion left behind! So too, when the taste of meditation is discovered, one will discard all doubt and discussion thereon and engage oneself fully in it.(Dhyana Vahini, Ch 1)
WHENEVER AND WHEREVER YOU PUT YOURSELF IN TOUCH WITH GOD, IT IS THE STATE OF MEDITATION. -BABA.
பரமாத்மாவை தியானிப்பதன் மூலம் மனம் இந்திரியங்களை ஈர்க்கும் பொருட்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும். அந்த சமயத்தில், புத்தி தனது அதிகாரத்தைக் கொண்டு, மூலாதாரத்தைப் பற்றிய சிந்தனைகளைத் தவிர இதர சிந்தனைகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று மனதிற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும். தன்னுடைய நிஜஸ்வரூபத்தைத் தெரிந்து கொண்டுவிட்ட பின், ஸ்திரமற்ற, அஸத்யமான, துக்கத்தைத் தருபவை பற்றிய பிரமை இல்லாது, மாறாக க்ஷேமம், சந்தோஷம் மற்றும் சத்தியம் ஆகியவற்றை மனம் வரவேற்கும்; கஷ்டங்கள் மற்றும் துக்கங்களால் பாதிக்கப்படாமல் இருக்கும். தியானத்தினால் மனமும், புத்தியும் பரிசுத்தப்படுத்தப்பட்டு, நல்மாற்றம் அடைவதன் மூலம், ஸச்சிதானந்தத்தின் விழிப்புணர்வைப் பெறுவதால், மனிதனின் வாழ்க்கை ஒரு புத்தொளியுடன் மிளிர்கிறது. ஒரு பழத்தை கொஞ்சம் கூட மீதி வைக்காமல் புசிக்கப்படுவதன் மூலம் அது சுவையானது என்பது தெளிவாகிறது. அதைப்போல, தியானத்தின் சுவையை உணர்ந்தபின், ஒருவர் எவ்வித தர்க்கமோ, சந்தேகமோ இல்லாமல் அதில் முழுமையாக ஈடுபடுவார். (தியான வாஹினி, அத்தியாயம்-1)
நீங்கள் எப்போதெல்லாம், எங்கெல்லாம், இறைவனுடன் உங்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறீர்களோ, அதுவே தியான நிலையாகும். - பாபா