azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 09 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 09 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Let His Will be done - this should be your guideline. The Emperor of the Cholas sought to visit the Srirangam Gopuram Temple, of which he had heard much. He got his chariot ready and moved forward many times in six months; but every time a recluse in ochre robes with a rosary around his neck and a halo around his head intercepted the vehicle. When the emperor alighted to honour him, he kept him engaged in conversation which was so enchanting that he forgot his journey and its goal. One day, when he lamented over his failure to fill his eyes with the glory of Srirangam, the Lord appeared before him and said, "Why do you lament? I am the Master who came to you so often as soon as you set out for Srirangam; recognise Me in all, that is the genuine pilgrimage to Srirangam." Consider all whom you meet as the Lord of Srirangam, your Master. Show untarnished love towards all who come to you. (Divine Discourse, Jan 14, 1967)
IF SOMEONE WERE TO QUESTION WHERE IS GOD, SAY WITH COURAGE AND CONVICTION THAT GOD IS EVERYWHERE. - BABA
இறைவன் சங்கல்பத்தின்படியே அனைத்தும் நடக்கட்டும் - இதுவே உங்களை வழிநடத்தும் வாசகமாக இருக்க வேண்டும். ஸ்ரீரங்கம் கோவில் பிரசித்தி பெற்றது என்று கேள்விப்பட்ட சோழப் பேரரசர் கோவிலை தரிசிக்க விழைந்தார். தனது ரதத்தைத் தயார் செய்து, ஆறு மாதங்களில் பலமுறை அந்தப் பயணத்தை மேற்கொள்ள முயற்சித்தார். ஆனால் ஒவ்வொரு முறையும், காவி உடையும், கழுத்தில் மணிமாலையும், தலையைச் சுற்றி ஒரு ஒளி வட்டமும் கொண்ட ஒரு சாது, அவரது வாகனத்தை இடைமறித்தார். பேரரசர் சாதுவை மரியாதை செய்ய கீழே இறங்கியதும், அவர் அரசரைத் தன்னுடன் பேசுவதில் ஈடுபடுத்துவார்; அவரது பேச்சு அவ்வளவு வசீகரமாக இருந்ததால், அரசர் தனது பயணத்தையும், அதன் குறிக்கோளையும் மறந்துவிடுவார். ஒருநாள், ஸ்ரீரங்கத்தின் மஹிமையை கண்ணார தரிசிக்க முடியாமல் போன தனது இயலாமையை எண்ணி அரசர் வருந்தியபோது, இறைவன் அவர் முன் தோன்றி, “எதற்காக வருந்துகிறாய்? நீ ஸ்ரீரங்கத்திற்குக் கிளம்பிய போதெல்லாம் பலமுறை உன் முன் வந்த சாது நானே; என்னை அனைவருள்ளும் காண்பாயாக; அதுவே ஸ்ரீரங்கத்திற்கு செல்லும் உண்மையான தீர்த்த யாத்திரையாகும்” என்று கூறினான். நீங்கள் சந்திக்கும் அனைவரையும் ஸ்ரீரங்கநாதராக, உங்கள் இறைவனாகக் கருதுங்கள். உங்களிடம் வரும் அனைவரிடமும், களங்கமற்ற ப்ரேமையைக் காட்டுங்கள். (தெய்வீக அருளுரை, ஜனவரி 14, 1967)
இறைவன் எங்கே என்று யாராவது கேள்வி கேட்டால், இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்று தைரியத்துடனும் திடநம்பிக்கையுடனும் கூறுங்கள். - பாபா