azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 05 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 05 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

God is the originator of both joy and grief. Without His will no blade of grass can waver in the wind! If this Truth is firmly established in the heart, one can get the unique bliss of liberation. God gives everything; whatever we get is His Grace. You have no right to judge whether what you get is good or bad. In order to have God so firmly installed within you, worship of idols or pictures, meditation on His Glory, recitation of His Name, and so on, are all useful as preliminary sadhana. I won't say that temples or houses of worship, altars and shrines where God is invoked and adored are not needed. Until the letters are learnt, illustrations are necessary in primers. The letter A is learnt in association with the image of the apple printed above it. On that account, you can’t be constrained to remember that particular apple whenever you think of ‘A’! (Divine Discourse, Apr 04,1973)
JUST AS THE WATER YOU DRINK IS ELIMINATED AS PERSPIRATION, THE KARMA THAT YOU ACCUMULATE IS ELIMINATED THROUGH KARMA, GLADLY BORNE. - BABA.
இறைவனே, சுகம், துக்கம் என்ற இரண்டையும் தோற்றுவிப்பவர் ஆவார். அவனுடைய சங்கல்பமின்றி, ஒரு புல் கூட காற்றினில் அசைய முடியாது! இந்த சத்தியத்தை இதயத்தில் உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டால், ஒருவர் மோக்ஷத்தின் பிரத்யேகமான பேரின்பத்தைப் பெறமுடியும். இறைவன் அனைத்தையும் அளிக்கிறான்; நமக்கு எது கிடைத்தாலும் அது அவனது அருளே. நீங்கள் பெறுவது நல்லதா கெட்டதா என்று தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. இறைவன் உங்களுக்குள் உறுதியாக நிலைநிறுத்தப்படுவதற்கு, விக்ரஹங்கள் அல்லது படங்களின் வழிபாடு, அவனுடைய மகிமையை தியானிப்பது, அவனது நாமஸ்மரணை போன்றவை ஆரம்பகால ஆன்மிக சாதனையாக பயனளிக்கக்கூடியவை. இறைவனைத் துதித்துப் போற்றும் ஆலயங்கள், வழிபாட்டுத்தலங்கள், சன்னதிகள், பீடங்கள் போன்றவை தேவையில்லை என்று நான் கூறமாட்டேன். எழுத்துக்களைக் கற்றுக்கொள்ளும்வரை அரிச்சுவடிகளில் விளக்கப்படங்கள் அவசியமே. A என்ற எழுத்து அதன் மேலே அச்சிடப்பட்ட ஆப்பிளின் படத்தைக்கொண்டு கற்றுக் கொள்ளப்படுகிறது. அதற்காக, நீங்கள் 'A'ஐ நினைக்கும் போதெல்லாம் அந்த குறிப்பிட்ட ஆப்பிளை நினைவில் கொண்டுவர வேண்டும் என்பது கட்டாயமில்லை! (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 04, 1973)
நீங்கள் குடிக்கும் தண்ணீர் வியர்வையாக வெளியேற்றப்படுவது போல், நீங்கள் குவித்திடும் கர்மாக்கள் அனைத்தும் நீங்கள் மகிழ்வுடன் ஏற்றுச் செய்யும் கர்மாக்களின் வாயிலாகவே கழிகின்றன. - பாபா.