azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 25 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 25 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

I often tell young college students that they may worship a picture as God, but should not worship God as a picture. They can entertain the concept that a carved stone is God or that a piece of wood is God. For, in that process, they are raising that substance into that high status. But, I also warn them that they should not degrade God into the status of paper, wood or stone. Of course, God is immanent in every atom and cell of the Universe and if you are able to recognise Him and adore Him therein, you are indeed blessed. Confirm in your faith that you are the Atma, which is the Divine Spark in you, and then, move into the world as heroes whom success cannot spoil or defeat cannot dishearten. It is not my intention to turn men towards God; for they have already God residing in them. There is no need to proceed towards Him or call on Him to come from somewhere outside you. Become aware of Him, as your Inner Motivator (the Ataryamin) - that is enough. (Divine Discourse, Mar 22,1973)
GOD IS IMMANENT IN THE WORLD. SO, TREAT THE WORLD LOVINGLY,
AS YOU WILL TREAT YOUR MASTER. - BABA
நான் அடிக்கடி இளம் கல்லூரி மாணவர்களிடம், அவர்கள் ஒரு படத்தை இறைவனாக வழிபடலாம், ஆனால் இறைவனை ஒரு படமாக வழிபடக்கூடாது என்று கூறுவதுண்டு. ஒரு செதுக்கப்பட்ட கற்சிலை அல்லது ஒரு மரவிக்கிரஹம் இறைவனே என்ற கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில், அவ்வாறு செய்வதில் அவர்கள் அந்தப் பொருளை அந்த உயர்ந்த நிலைக்கு மேம்படுத்தி விடுகிறார்கள். ஆனால், இறைவனை ஒரு காகிதம், மரம் அல்லது கல்லின் நிலைக்கு தரம்தாழ்த்தி விடக்கூடாது என்றும் அவர்களை நான் எச்சரிக்கிறேன். நிச்சயமாக, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும், உயிரணுவிலும் இறைவன் இருக்கிறான்; உங்களால் அவனை அவ்வண்ணம் அடையாளம் கண்டு போற்ற முடிந்தால், நீங்கள் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே. உங்களுள் இருக்கும் தெய்வீகப்பொறியான ஆத்மாதான் நீங்கள் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருங்கள்; அதன்பின், வெற்றியால் பெருமிதமடையாத அல்லது தோல்வியால் துவண்டுவிடாத மாவீரர்களாக உலகில் நடைபோடுங்கள். மனிதர்களை இறைவனை நோக்கித் திருப்புவது என் நோக்கமல்ல; ஏனென்றால், அவர்களுக்குள் இறைவன் ஏற்கனவே குடிகொண்டுள்ளான். அவனை நோக்கிச் செல்லவோ அல்லது உங்களுக்கு வெளியே எங்கிருந்தோ இருந்து வரும்படி அவனை அழைக்கவோ தேவையில்லை. உங்களுடைய அகஉந்துசக்தியாக (அந்தர்யாமி) அவனை உணருங்கள் - அது போதும். (தெய்வீக அருளுரை, மார்ச் 22, 1973)
இறைவன் உலகில் நீக்கமற நிறைந்துள்ளான். எனவே, உங்களுடைய இறைவனை நீங்கள் நடத்துவதைப் போல உலகை ப்ரேமையுடன் நடத்துங்கள். - பாபா