azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 22 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 22 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Start the day with Love, spend the day with Love, fill the day with Love, and end the day with Love - this is the way to God. On this path, you will not be waylaid by anger, lust or greed. You will have only the company of the good and proper facilities for speedy progress. Do your duty with Love, as if you are thereby adoring God. Many leaders are today clamouring for freedom to follow Sweccha, that is, swa-iccha, one's own inclinations. But real freedom is gained only when you are free of the pernicious influence of passions like lust, envy, pride, greed and hate. Swa-iccha does not mean to follow any and every desire that arises in your mind; it means the inclination of your true self towards God. If you incline towards God, the passions that enslave you will be rendered powerless. Then, you will do your 'duty' as sweccha, for you will love it with all your heart! (Divine Discourse,Mar 17,1973)
DUTY WITHOUT LOVE IS DEPLORABLE, DUTY WITH LOVE IS DESIRABLE, AND
LOVE, WITHOUT DUTY, IS DIVINE. -BABA
உங்களுடைய நாளை ப்ரேமையுடன் தொடங்குங்கள், ப்ரேமையுடன் கழியுங்கள், ப்ரேமையால் நிரப்புங்கள், ப்ரேமையுடன் நிறைவு செய்யுங்கள் - இதுவே இறைவனை அடைவதற்கான பாதையாகும். இந்தப் பாதையில், நீங்கள் கோபம், காமம், பேராசை ஆகியவற்றின் எதிர்பாராத தாக்குதலுக்கு ஆளாக மாட்டீர்கள். உங்களுக்கு நல்லோரின் சகவாசம் மற்றும் துரித முன்னேற்றத்திற்கு ஏற்ற சரியான வசதிகள் மட்டுமே இருக்கும். உங்களுடைய கடமையை இறைவனை போற்றுவதைப் போல ப்ரேமையுடன் ஆற்றுங்கள். பல தலைவர்கள் இன்று ஸ்வேச்சா, அதாவது ஸ்வ-இச்சா, ஒருவரின் சொந்த விருப்பங்களைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் வேண்டுமென்று ஆர்ப்பரிக்கின்றனர். ஆனால், காமம், பொறாமை, தற்பெருமை, பேராசை மற்றும் வெறுப்பு போன்ற உணர்ச்சிகளின் தீங்கு விளைவிக்கும் ஆதிக்கத்திலிருந்து விடுபடும்போது மட்டுமே உண்மையான சுதந்திரத்தைப் பெற முடியும். ஸ்வ-இச்சா என்றால், உங்களுடைய மனதில் எழும் ஆசையில் ஏதாவது ஒன்றையும் அல்லது ஒவ்வொன்றையும் பின்பற்றுவது என்று பொருளல்ல; அது, உங்களுடைய மெய்நிலை இறைவன்பால் ஈடுபட்டிருப்பதைக் குறிக்கிறது. நீங்கள் இறைவனிடம் ஈடுபாடு கொண்டிருந்தால், உங்களை அடிமைப்படுத்தும் அதீத உணர்ச்சிகள் சக்தியற்றதாகிவிடும். பிறகு, நீங்கள் உங்கள் 'கடமை'யை ஸ்வேச்சாவுடன் ஆற்றுவீர்கள், ஏனென்றால் நீங்கள் அதை மனதார விரும்புவீர்கள்! (தெய்வீக அருளுரை, மார்ச் 17, 1973)
ப்ரேமையற்ற கடமை கண்டிக்கத்தக்கது, ப்ரேமையுடனான கடமை விரும்பத்தக்கது, கடமையாக இல்லாதபோதும் காட்டப்படும் ப்ரேமை தெய்வீகமானது. – பாபா