azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 20 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 20 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

See that by your word, deed or thought, you don’t hurt others, physically or mentally. When you see injustice and wickedness in others, examine your conduct and character first; for, what you see in others might be the result of what’s in your own self! Wear the eyeglasses of Prema (Love); the whole world will be filled with Prema. God is present where only good pervades and prevails. If you examine the present behaviour of men, you will find that their vision and listening is bad, and their thoughts are impure, and so, even the human nature in you is being besmirched and made bestial, if not worse! When God enters your vision, and the things you listen to, as well as the subjects you think of, your lives will be rendered happy and useful. Control the mind and regulate the impulses emanating from it by means of a clarified intelligence. These are primary requisites for a happy life! (Divine Discourse, Mar 17,1973)
KEEP THE NAME OF GOD EVER ON THE TONGUE AND THE GLORY OF GOD EVER IN YOUR MEMORY; SEEK THE COMPANY OF THE GOOD AND THE GODLY! - BABA
உங்கள் சொல், செயல், சிந்தனை ஆகியவற்றின் மூலம், நீங்கள் மற்றவர்களை உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ காயப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களிடம் அநீதியையும், அக்கிரமத்தையும் நீங்கள் பார்க்கும்போது, முதலில் உங்களுடைய நடத்தை மற்றும் குணநலனை ஆராயுங்கள்; ஏனென்றால், மற்றவர்களிடம் நீங்கள் பார்ப்பது உங்களுள் இருப்பவையின் விளைவாகக் கூட இருக்கலாம்! ப்ரேமையின் கண்ணாடியை அணிந்து கொள்ளுங்கள்; உலகனைத்தும் ப்ரேமையால் நிறைந்திருக்கும். எங்கு நல்லவை மட்டுமே வியாபித்து, மேலோங்கி இருக்கிறதோ, அங்குதான் இறைவன் இருக்கிறார். மனிதர்களின் தற்போதைய நடத்தையை நீங்கள் ஆராய்ந்தால், அவர்கள் பார்ப்பதும், கேட்பதும் மோசமாக இருப்பதையும், அவர்களின் எண்ணங்கள் தூய்மையற்றதாக இருப்பதையும், அதனால், உங்களுக்குள் இருக்கும் மனித இயல்பு கூட மாசுபடுத்தப்பட்டு மிருகத்தனமாக ஆக்கப்படுவதையும் காண்பீர்கள்! இறைவன் உங்கள் பார்வையிலும், நீங்கள் கேட்கும் மற்றும் நினைக்கும் விஷயங்களிலும் கூட பிரவேசிக்கும் போது, உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கப்பட்டு விடுகிறது. மனதைக் கட்டுப்படுத்தி, அதிலிருந்து எழும் தூண்டுதல்களை தெளிந்த புத்தியின் மூலம் ஒழுங்குபடுத்துங்கள். இவையே ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான முதன்மைத் தேவைகள்! (தெய்வீக அருளுரை, மார்ச் 17, 1973)
இறைவனது திருநாமத்தை நாவிலும், அவனது மகிமையை உங்கள் நினைவிலும் எப்போதும் வைத்திருங்கள்; நல்லோர்கள் மற்றும் தெய்வீகமானவர்களின் சகவாசத்தை நாடுங்கள்! – பாபா