azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 17 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 17 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Dedication of all activity to God and surrendering to His Will is called Bhakti Marga (path of devotion). Bhakti has to be built on conviction, not on blind unreasoning belief. That‘s why I always emphasise the role of intelligence. Intelligence is a special gift from God to man; it confers the power of discrimination between right and wrong. Peace or happiness depends on the choice of the right means and this is a matter to be decided by intelligence. Prosperity too depends on the intelligent exploitation of resources available, human and other. The wavering 'intelligence' of man, that has lost its one-pointedness and purity is responsible for all the conflicts and quarrels that are prevalent today. So, I ask you to pray to God to grant you the capacity to think straight and right, and to stick to the correct decision once decided on, without being affected by egoism, greed or hatred. Pray for a balanced mind unaffected by prejudices and passions. (Divine Discourse, Mar 17,1973)
THERE IS NO VEDA OR SASTRA (SCRIPTURE) SUPERIOR TO DEVOTION.
DIVINE LOVE ENCOMPASSES ALL SACRED ACTS. - BABA
எல்லா செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து, அவனுடைய சங்கல்பத்திற்கு சரணடைந்துவிடுவதே பக்தி மார்க்கம் எனப்படுகிறது. பக்தி என்பது திடநம்பிக்கையின் அடிப்படையில் இருக்கவேண்டுமே அன்றி, கண்மூடித்தனமான மூடநம்பிக்கையின் மீதல்ல. அதனால்தான் நான் எப்போதும் புத்தியின் பங்கைப் பற்றி வலியுறுத்துகிறேன். புத்தி என்பது இறைவன் மனிதனுக்கு அளித்த சிறப்புப் பரிசாகும்; சரியானது எது, தவறானது எது என்று பகுத்தறியும் சக்தியை அது அளிக்கிறது. சாந்தி அல்லது சந்தோஷம், சரியான வழியைத் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்தது, மேலும் இது புத்தியால் தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். இருக்கின்ற மனிதவளம் மற்றும் பிற வளங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதைப் பொறுத்தே செழிப்பும் இருக்கிறது. தன் ஒருமுகத்தன்மையையும், தூய்மையையும் இழந்துவிட்ட மனிதனின் அலைபாயும் ‘புத்தியே’, இன்று நிலவும் எல்லா சண்டை, சச்சரவுகளுக்கும் காரணமாகும். எனவே, நேராக சரியாக சிந்திப்பதற்கு மற்றும், சரியான முடிவை எடுத்தவுடன், அகங்காரம், பேராசை அல்லது வெறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் அந்த முடிவின்படி உறுதியாக இருப்பதற்கான திறனை உங்களுக்கு அளிக்குமாறு நீங்கள் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும் என்று நான் அறிவுறுத்துகிறேன். தப்பெண்ணங்கள் மற்றும் கட்டுக்கடங்காத உணர்ச்சிகளால் பாதிக்கப்படாத சமநிலையான மனதிற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். (தெய்வீக அருளுரை, மார்ச் 17, 1973)
பக்தியைவிட மேலான வேதமோ சாஸ்திரமோ இல்லை. தெய்வீக ப்ரேமை அனைத்து புனிதமான செயல்களையும் உள்ளடக்கியது. - பாபா