azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 03 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 03 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

The "I-am-body" consciousness must go, if the "I-am-embodied" consciousness, must emerge. So long as you are in the dehi (I-am-embodied) consciousness, no pain or grief, pride or egoism can tarnish you. It is like seawater. Take a small quantity of seawater and keep it separate in a bottle; it will get foul in a few days. But, so long as it was in the sea, nothing could befoul it. Be in the sea, as part of it; do not separate yourself, do not individualise yourself, do not feel that you are the deha (body), apart from the dehi ('I'). This must be your diksha (steady pursuit). And, the diksha must express itself in actual practice, as nishtha and sikshana. Nishtha means discipline, control; sikshana means training of the senses, the emotions, etc. Nashta (food) should be subordinated to Nishtha. The body (deha) is but an instrument to realise the Indweller (dehi). (Divine Discourse, Jan 29,1965)
IT IS ONLY THOSE WHO IDENTIFY THEMSELVES WITH THE BODY, THAT EXULT OR FEEL PAINED! - BABA.
"நான்-உடலில்-உறைபவன்" என்ற உணர்வு வெளிப்பட வேண்டுமென்றால், "நான்-உடலே" என்ற உணர்வு போக வேண்டும். நீங்கள் தேஹி (நான்-உடலில்-உறைபவன்) என்ற உணர்வோடு இருக்கும்வரை, துன்பம், துயரம், தற்பெருமை, அகந்தை போன்ற எதுவும் உங்களை பாதிக்க முடியாது. இது கடல்நீரைப் போன்றது. சிறிதளவு கடல்நீரை எடுத்து, தனியாக ஒரு பாட்டிலில் வைத்திருங்கள்; சில நாட்களில் அது கெட்டுவிடும். அது கடலில் இருக்கும் வரை, அதை எதுவும் கெடுக்க முடியாது. கடல் போன்ற நிலையில், அதன் ஒரு பகுதியாக இருங்கள்; உங்களை நீங்களே பிரித்துக்கொண்டு, தனிப்பட்டவர்களாக, தேஹி (நான்) என்பதிலிருந்து விலகி, நீங்கள் தேஹம் (உடல்) தான் என்று எண்ணாதீர்கள். இது உங்கள் தீக்ஷையாக (நிலையான நாட்டம்) இருக்க வேண்டும். மேலும் நடைமுறையில் இந்த தீக்ஷை, நிஷ்டை மற்றும் சிக்ஷணையாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். நிஷ்டை என்றால் ஒழுக்கம், கட்டுப்பாடு; சிக்ஷணை என்பது புலன்கள், உணர்ச்சிகள் போன்றவற்றிற்கு பயிற்சி அளிப்பது. நாஷ்டாவை (உணவு) நிஷ்டைக்கு கட்டுப்பட்டு இருக்கச் செய்ய வேண்டும். உடல் (தேஹம்) என்பது உள்ளுறைபவரை (தேஹி) உணர்வதற்கான ஒரு கருவியே அன்றி வேறில்லை. (தெய்வீக அருளுரை, ஜனவரி 29, 1965)
உடலுடன் தங்களை அடையாளம் காண்பவர்கள் மட்டுமே,
மகிழ்ச்சியடைவோ அல்லது வேதனைப்படவோ செய்கிறார்கள்! - பாபா