azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 01 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 01 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

We witness in the world all kinds of pains and sorrows. But none of these is permanent. Every term of pain is followed by pleasure. The experience of pleasure is refined and enhanced by the earlier experience of pain. Like gold is refined by melting it in a crucible, pain divinises the pleasure that follows it. The New Year or a new month does not bring with it any new joy or sorrow. Every second is new, because it heralds the march of time. A year is in fact a succession of seconds turning into minutes, days and months. It is only when every moment is cherished as new, will the new year become new. The sacred way in which every moment is spent will determine the fruitfulness of the year. If you wish to lead a sacred life and have sacred experiences, you must engage yourself in sacred actions. The good and evil in the world can be changed only by the change in men’s actions. The transformation of society must start with transformation of individuals. (Divine Discourse, Jan 01,1998)
IN THIS NEW YEAR, DRIVE AWAY ALL BAD THOUGHTS, BREED GOOD FEELINGS, AND SPEND TIME IN CONTEMPLATION OF GOD. – BABA
நாம் உலகில் பலவிதமான துக்கங்களையும், துயரங்களையும் பார்க்கிறோம். ஆனால் இவை எதுவுமே நிரந்தரமானவை அல்ல. ஒவ்வொரு துன்பகரமான காலகட்டத்தையும் தொடர்ந்து வருவது இன்பமே. இன்பத்தின் அனுபவம், முந்தைய துன்பத்தின் அனுபவத்தால் பக்குவப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படுகிறது. எவ்வாறு தங்கம் உலையில் வைத்து உருக்கி சுத்திகரிக்கப்படுகிறதோ, அவ்வாறே, துன்பமானது அதனைத் தொடர்ந்து வரும் இன்பத்தை தெய்வீகமாக்குகிறது! புத்தாண்டு அல்லது புதிய மாதம் பிறக்கும்போது, அதனுடன் புதிதாக மகிழ்ச்சி அல்லது துக்கம் எதையும் கொண்டு வருவதில்லை. ஒவ்வொரு நொடியும் புதியதே, ஏனென்றால் அது காலத்தின் பயணத்தை பிரகடனம் செய்கிறது. உண்மையில், வருடம் என்பது நிமிடங்களாகவும், நாட்களாகவும், மாதங்களாகவும் மாறும் வினாடிகளின் தொடர்ச்சியாகும். ஒவ்வொரு கணமும் புதியதாகப் போற்றப்படும் போதுதான், புத்தாண்டு புதியதாக மாறும். ஒவ்வொரு தருணமும் புனிதமாக கழிக்கப்படும் விதம்தான் ஓர் வருடத்தின் பலனைத் தீர்மானிக்கும். நீங்கள் புனிதமான வாழ்க்கையை வாழவும், புனிதமான அனுபவங்களைப் பெறவும் விரும்பினால், புனிதமான செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மனிதர்களின் செயல்களில் ஏற்படும் மாற்றத்தால் மட்டுமே உலகில் உள்ள நன்மை தீமைகளை மாற்ற முடியும். சமுதாயத்தின் நல்மாற்றம் தனிநபர்களின் நல்மாற்றத்திலிருந்தே தொடங்க வேண்டும். (தெய்வீக அருளுரை, ஜனவரி 01, 1998)
இந்த புத்தாண்டில், தீய எண்ணங்களை விரட்டி அடித்து, நல்லுணர்வுகளை வளர்த்துக்கொண்டு, காலத்தை இறைசிந்தனையில் கழியுங்கள். - பாபா