azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 29 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 29 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Do as much as you can, as quickly as you can. If you cannot do any good, at least desist from doing harm; or from finding fault with those who serve you. Know that seva is a better form of sadhana (spiritual effort) than even dhyana; how can God appreciate the dhyana (meditation) you do, when adjacent to you, you have someone in agony, whom you do not treat kindly, for whom you do not make all efforts to help? Do not keep yourself apart, intent on your own salvation, through japa or dhyana. Move among people, looking for opportunities to help; but, have the name of God on the tongue and the form of God before the eye of the mind. That is the highest sadhana. 'Dil me Ram! Hath me Kam!' - Ram in the heart! Work in hand! Proceed in that spirit. God's Grace will be showered on you, in full measure! (Divine Discourse, Feb 01,1970)
THE BEST WAY TO LOVE GOD IS TO LOVE ALL, SERVE ALL.-BABA
உங்களால் எவ்வளவு முடியுமோ, எவ்வளவு விரைவாக முடியுமோ அந்த அளவிற்கு சேவை செய்யுங்கள். உங்களால் நல்லது செய்ய முடியாவிட்டாலும், குறைந்தது தீமை செய்வதையோ அல்லது உங்களுக்கு சேவை செய்பவர்களிடம் குறை காண்பதையோ தவிர்த்து விடுங்கள். சேவை என்பது தியானத்தை விட சிறந்த ஆன்மிக சாதனை என்பதை அறிந்து கொள்ளுங்கள்; உங்களுக்குப் பக்கத்தில் ஒருவர் வேதனையில் இருக்கும்போது, அவரை நீங்கள் கனிவுடன் நடத்தாமல், அவருக்கு உதவ எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால், இறைவன் நீங்கள் செய்யும் தியானத்தை எவ்வாறு பாராட்ட முடியும்? ஜபம் அல்லது தியானத்தின் மூலம் முக்தி அடையும் நோக்கத்திற்காக, உங்களையே நீங்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். மக்களுடன் பழகும்போது உதவி செய்வதற்கான வாய்ப்புக்களைத் தேடுங்கள்; ஆனால், இறைவனுடைய திருநாமத்தை நாவிலும், அவனுடைய திருவுருவத்தை மனக்கண் முன்னும் கொண்டிருங்கள். அதுவே மிக உயர்ந்த ஆன்மிக சாதனையாகும். ‘தில் மே ராம்! ஹாத் மே காம்!’- இதயத்தில் இறைவன்! கரங்களில் பணி! இந்த உணர்வுடன் செயல்படுங்கள். உங்கள் மீது இறைவனுடைய அருள் பரிபூரணமாக பொழியப்படும்! (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 01, 1970)
இறைவனை நேசிப்பதற்கு மிகச் சிறந்த வழி, அனைவரையும் நேசித்து, அனைவருக்கும் சேவை செய்வதே. - பாபா