azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 25 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 25 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

God takes upon Himself the pain and sorrow of the world, in order to prepare the hearts of men for Love! This day marks the beginning of the Christian Era, the year of Christ. Christ sacrificed His life for the sake of those who put their faith in Him. He propagated the truth that service is God, that sacrifice is God. Even if you falter in the adoration of God, don’t falter in the service of living Gods, who assume human shape and are moving all around you in large numbers, wearing manifold costumes of apparel and speech! Only those who can pour out compassion to fellowmen can claim a place in the Grace of God. This is also the highest spiritual discipline; it impresses on you, unity of humanity and glory of God's immanence. May this discipline of Seva taken up with genuine delight spread all over, and may this land be happy and prosperous. May the world have peace and happiness, and loving trust. That is My blessing. (Divine Discourse, Dec 25,1970)
THE MESSAGE OF "FATHERHOOD OF GOD AND THE BROTHERHOOD OF MAN," WHICH JESUS CHRIST PROCLAIMED 2000 YEARS AGO, SHOULD BECOME A LIVING FAITH FOR THE ACHIEVEMENT OF REAL PEACE AND THE UNITY OF MANKIND. – BABA
மனிதர்களின் இதயங்களை ப்ரேமைக்காக தயார் செய்வதற்கு, இறைவன், உலகின் துன்பத்தையும் துக்கத்தையும் தானே ஏற்றுக் கொள்கிறான்! இந்த நாள் கிறிஸ்துவின் சகாப்தத்தை, அதாவது, கிறிஸ்துவ ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. கிறிஸ்து தம்மீது நம்பிக்கை வைத்தவர்களுக்காக தம் உயிரையே தியாகம் செய்தார். அவர், சேவையே இறைவன், தியாகமே இறைவன் என்ற உண்மையைப் பிரச்சாரம் செய்தார். நீங்கள் இறைவனை வழிபடுவதில் தவறினாலும், உங்களைச் சுற்றிலும் பெருமளவில், பலவிதமான நடை உடை பாவனைகளுடன் நடமாடிக்கொண்டிருக்கும் வாழும் தெய்வங்களான மனிதர்களுக்கு சேவை ஆற்றுவதில் தவறிவிடாதீர்கள்! சக மனிதர்களிடம் கருணையைப் பொழிபவர்களே இறைவனின் அருளுக்குப் பாத்திரமாக முடியும். இதுவே மிக உயர்ந்த ஆன்மிக சாதனையும் ஆகும்; இது மனிதகுலத்தின் ஒற்றுமையையும், அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனின் மகிமையையும் உங்கள் மனதில் பதியச் செய்கிறது. உண்மையான ஆனந்தத்துடன் ஆற்றப்படும் இந்த சேவை எங்கும் பரவட்டும், மேலும் இந்த பூமி மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கட்டும்; உலகில் சாந்தி சந்தோஷமும், நேசத்துடனான நம்பிக்கையும் நிலவட்டும் என்று ஆசீர்வதிக்கிறேன். (தெய்வீக அருளுரை, டிசம்பர் 25, 1970)
உண்மையான அமைதி மற்றும் மனிதகுலத்தின் ஒற்றுமையை அடைவதற்காக, 2000 ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்து பறைசாற்றிய “இறைவனே அனைவருக்கும் தந்தை, மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள்” என்ற போதனை ஒரு நிலையான நம்பிக்கையாக ஆக வேண்டும். - பாபா