azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 23 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 23 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

All your charity and worship are of no significance to the Lord. Show your charity and wealth to the income tax department. God needs only your love. There is no tax on love. Some sit in dhyana (meditation), but their minds are in the market or in the hairdressing shop. Is this dhyana or japa (repetition of the Divine Name)? The mind should be immersed in Krishna. Instead, it is filled with trishna (desires). What is needed is Krishna, not trishna. Krishna will fulfil all your trishnas. Dear Devotees! Mere chanting of the Lord’s name is not enough. Offer your love to God. Love is not your property. In fact, it is the property of God. Surrender to God what is His. What is the use of a long life without this offering? You have no right to offer your love to anyone other than God. When you offer all your love to God, He will look after all your needs. (Divine Discourse, Sep 03,1999)
DEVOTION SHOULD MANIFEST ITSELF IN EVERY ACTION. EVERYTHING DONE OUT OF LOVE FOR GOD AND AS AN OFFERING BECOMES DEVOTION. - BABA
உங்களுடைய தானதருமங்களும், வழிபாடுகளும் இறைவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. உங்கள் தான தருமங்களையும், செல்வத்தையும் வருமான வரித்துறையிடம் காட்டுங்கள். இறைவனுக்குத் தேவை உங்கள் ப்ரேமை மட்டுமே. ப்ரேமைக்கு வரி எதுவும் கிடையாது. சிலர் தியானத்தில் அமர்ந்திருப்பார்கள், ஆனால் அவர்களின் மனம் சந்தையில் அல்லது சலூனில் இருக்கும். இதுவா தியானம், ஜபம்? மனம் கிருஷ்ணரிடம் லயித்திருக்க வேண்டும். மாறாக, அது த்ரிஷ்ணாவால் (ஆசைகள்) நிரம்பியுள்ளது. தேவை கிருஷ்ணா தான், த்ரிஷ்ணா அல்ல. கிருஷ்ணா உங்களின் அனைத்து த்ரிஷ்ணாக்களையும் நிறைவேற்றுவார். அன்பான பக்தர்களே! இறைவனின் திருநாமத்தை உச்சரித்தால் மட்டும் போதாது. உங்கள் ப்ரேமையை இறைவனுக்கு அளியுங்கள். ப்ரேமை உங்கள் சொத்து அல்ல. உண்மையில், அது இறைவனின் சொத்து. இறைவனுடையதை இறைவனுக்கே அர்ப்பணியுங்கள். இந்த அர்ப்பணிப்பு இல்லாமல் நீண்ட ஆயுள் இருந்து என்ன பயன்? உங்கள் ப்ரேமையை இறைவனைத் தவிர வேறு யாருக்கும் வழங்க உங்களுக்கு உரிமை இல்லை. உங்கள் ப்ரேமை அனைத்தையும் நீங்கள் இறைவனிடம் செலுத்தும்போது, உங்கள் தேவைகள் அனைத்தையும் அவர் கவனித்துக் கொள்வார். (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 03, 1999)
பக்தி என்பது ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட வேண்டும். இறைவன் மீதுள்ள ப்ரேமையினாலும், அவருக்கு அர்ப்பணிப்பாக செய்யப்படும் அனைத்தும் பக்தியாக ஆகிவிடுகிறது. – பாபா