azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 16 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 16 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Pray to the Lord to strengthen the conviction and faith that He is the Charioteer in all; He will open your eyes to the Truth and reveal to you that He is the Sanathana Sarathi, in all. That revelation will confer on you incomparable bliss, and grant you kinship with Creation's manifoldness. That is the reason why Krishna told Duryodhana, who pleaded with Him for help against the Pandavas on the eve of the battle, "If you hate the Pandavas, you are hating Me, for they have recognised Me as the breath of their life." Know Him as your strength, your breath, your intelligence, your joy - He becomes all that and more. No more can any faculty of yours hinder your progress. He will direct all of them towards the highest Goal; the senses, the mind, the subconscious, the unconscious, the intelligence - all. Grace will confer all you need! (Divine Discourse, Jul 31,1967)
SPIRITUAL TRANSFORMATION CALLS FOR CHANGING THE MIND FROM A PRISONER OF THE THREE GUNAS (QUALITIES) TO ONE THAT IS BOUND TO GOD. – BABA
இறைவனே அனைவருள்ளும் சாரதியாக இருக்கிறான் என்ற தீர்மானத்தையும், நம்பிக்கையையும் வலுப்படுத்த வேண்டும் என்று அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்; அவன் உங்கள் கண்களைத் திறந்து அனைவருள்ளும் இருக்கும் சனாதன சாரதி அவனே என்கிற உண்மையை வெளிப்படுத்துவான். அந்த வெளிப்பாடு உங்களுக்கு ஒப்பற்ற பேரின்பத்தை அளித்து, பல்வகையாகத் திகழும் படைப்புடன் நெருக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான், போருக்கு முன்பு பாண்டவர்களுக்கு எதிராக தனது உதவியை நாடி வந்த துரியோதனனிடம் கிருஷ்ணர், "பாண்டவர்களை நீ வெறுத்தால், நீ என்னையே வெறுப்பதாகும், ஏனெனில் அவர்கள் என்னை தங்கள் வாழ்க்கையின் உயிர்மூச்சாகவே கொண்டுள்ளார்கள்" என்று கூறினார். இறைவனே உங்கள் பலம், உங்கள் மூச்சு, உங்கள் அறிவாற்றல், உங்கள் மகிழ்ச்சி என்று அறிந்து கொள்ளுங்கள் - அவன் இவை அனைத்துமாகவும், அதற்கு மேலாகவும் ஆகிவிடுகிறான். அதன் பிறகு, உங்களுடைய எந்த புலனும் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது. அவன் உங்களுடைய புலன்கள், மனம், அந்தராத்மா, உள்ளுணர்வு, புத்தி என அனைத்தையும் மகோன்னதமான குறிக்கோளை நோக்கி வழி நடத்துவான். இறையருள் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் அளித்துவிடும்! (தெய்வீக அருளுரை, ஜூலை 31, 1967)
முக்குணங்களின் பிடியில் இருக்கும் மனது இறைவனுடன் இணைந்திருக்கும் ஒன்றாக மாறுவது தான் ஆன்மிக நல்மாற்றம் ஆகும். – பாபா