azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 08 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 08 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The deity, Dakshinamurti was once walking along a wide seashore alone, immersed in deep meditation. He saw a dry little twig on the crest of a wave in the distance; it was being passed on from one wave to another, from trough to crest, from crest to trough, until it was cast on the sands on shore, near where He stood! He was astounded at the egoism of the Ocean that would not give asylum to even a tiny twig. Sensing His reaction, the Ocean declared in words that He could understand, "Mine is neither egoism nor anger; it is only the duty of self-preservation. I shouldn’t allow the slightest blot to deface my grandeur. If I allow this twig to mar my splendour, it will be the first step in my downfall." Then, Dakshinamurti smiled within Himself admiring the vigilance of the mighty Ocean. He pictured the incident as a great lesson in spiritual endeavour. The slightest twig of desire, if it falls on the mind, has to be immediately lifted out of the pure waters and thrown off! ( Divine Discourse, Jul 29,1969)
THE MIND HAS TO BE COMPLETELY EMPTIED OF ALL BAD THOUGHTS TO ACHIEVE REAL PEACE. EVERY BAD THOUGHT MUST BE ROOTED OUT THE MOMENT IT ARISES IN THE MIND. - BABA
ஒருமுறை பகவான் தக்ஷிணாமூர்த்தி ஆழ்ந்த தியானத்தில் லயித்தவாறே பரந்த கடற்கரையின் பக்கமாக, தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர், ஒரு சிறிய உலர்ந்த மரக்குச்சி தூரத்தில் ஒரு அலையின் மீது இருப்பதையும், ஒரு அலையிலிருந்து மற்றொரு அலைக்கும், அலையின் மேலும் கீழும், கீழும் மேலுமாக பந்தாடப்பட்டு, கடைசியில் கரையின் மணற்பரப்பில் அவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகில் வீசி எறியப்படுவதையும் கண்டார்! ஒரு சிறு மரக்குச்சிக்குக் கூட அடைக்கலம் அளிக்காத சமுத்திரத்தின் அகந்தையைக் கண்டு திகைத்தார். அவரது சிந்தனையை உணர்ந்த சமுத்திர ராஜன், அவர் புரிந்துகொள்ளக் கூடிய வார்த்தைகளில், ‘’என்னுடையது அகந்தையோ அல்லது கோபமோ அல்ல; இது என் தற்காத்துக்கொள்ளும் கடமையாகும். ஒரு சிறு கறையைக் கூட என் மேன்மையைக் களங்கப்படுத்த நான் அனுமதிக்கக் கூடாது. என் சிறப்பைக் களங்கப்படுத்த நான் இந்தக் குச்சியை அனுமதித்தால், அதுவே என் வீழ்ச்சியின் முதல்படியாக ஆகிவிடும்” என்று கூறினார். பின்னர், பகவான் தக்ஷிணாமூர்த்தி, இந்த மஹாசமுத்திரம் விழிப்புடன் இருப்பதைப் பாராட்டி தனக்குள் புன்னகைத்தார். அவர் இந்த சம்பவத்தை ஆன்மிக சாதனையில் ஒரு மகத்தான பாடமாகக் கண்டார். மிகச்சிறிய ஆசை எனும் குச்சி கூட மனதில் விழுந்தால், அதைத் தூய நீரிலிருந்து உடனே எடுத்து வீசி எறிந்து விட வேண்டும். (தெய்வீக அருளுரை, ஜூலை 29, 1969)
உண்மையான சாந்தியைப் பெற தீய சிந்தனைகள் முழுமையாக மனதிலிருந்து நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தீய சிந்தனையும் மனதில் எழும் அத்தருணமே வேரறுக்கப்பட வேண்டும். - பாபா