azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Heads bloat only through ignorance; if the Truth be known, all men will become as humble as Bharthrhari. He was a mighty emperor, who ruled from sea to sea; his decree was unquestioned, and his will prevailed over vast multitudes of men. Yet, when he realised in a flash that life is but a short sojourn here below, he renounced his wealth and power and assumed the ochre robes of the wandering monk. His countries and vassal princes shed genuine tears, for they loved and adored him. They lamented that he had donned the tattered robe of the penniless penitent, and lived on alms. "What a precious possession you have thrown away? And, what a sad bargain you have made", they wailed. But, Bharthrhari replied, "Friends, I have made a very profitable bargain. This robe is so precious that even my empire is a poor payment in exchange." That is the measure of the grandeur of the spiritual path that leads to God.( Divine Discourse, Jun 26, 1969)
YOU STRUGGLED UPWARDS FROM THE STONE TO PLANT, TO ANIMAL, THEN TO MAN! DO NOT SLIDE BACK INTO THE BEAST; RISE HIGHER TO DIVINITY, SHINING WITH THE NEW EFFULGENCE OF LOVE! - BABA
அறியாமையால்தான் தலைக்கனம் அதிகமாகிறது; உண்மை தெரிந்தால், எல்லா மனிதர்களும் பர்த்ருஹரியைப் போல் பணிவானவர்களாக ஆகி விடுவார்கள். அவர், ஒரு கடல் முதல் மறு கடல் வரை பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை ஆண்ட வலிமைமிக்க பேரரசர்; அவரது ஆணை கேள்விக்கு இடமின்றி ஏற்கப்பட்டது, மேலும் அவரது ஆளுமை பரந்த திரளான மனிதர்கள் மீது மேலோங்கியிருந்தது. ஆயினும்கூட, வாழ்க்கை என்பது இந்த பூமியில் குறுகிய காலம் மட்டுமே என்பதை அவர் ஒரு கணப்பொழுதில் உணர்ந்தபோது, அவர் தனது செல்வத்தையும் அதிகாரத்தையும் துறந்து, துறவியின் காவியுடைகளை தரித்துக் கொண்டார். அவரது நாட்டு மக்களும், சிற்றரசர்களும் உண்மையாகவே கண்ணீர் வடித்தனர், ஏனென்றால் அவர்கள் அவரை நேசித்துப் போற்றியவர்கள். சல்லிக்காசற்ற தவசியின் கிழிந்த ஆடையை அணிந்து கொண்டு, யாசித்து வாழ்கிறாரே என்று அவர்கள் புலம்பினார்கள். "எவ்வளவு விலைமதிப்பற்ற சொத்தை நீ தூக்கி எறிந்துவிட்டாய்? மேலும், என்னே ஒரு வருந்தத்தக்க வியாபாரத்தை முடித்திருக்கிறாய்!” என்றெல்லாம் புலம்பினார்கள். ஆனால் பர்த்ருஹரி, "நண்பர்களே, நான் மிகவும் லாபகரமான வியாபாரத்தையே செய்துள்ளேன். இந்த காவியுடை எவ்வளவு விலைமதிப்பற்றது என்றால், இதற்கு விலையாக என் சாம்ராஜ்யத்தையே கொடுத்தாலும் ஈடாகாது" என்று பதிலளித்தார். அதுவே இறைவனிடம் இட்டுச்செல்லும் ஆன்மிகப் பாதையின் மகத்துவத்தின் அளவுகோலாகும். (தெய்வீக அருளுரை, ஜூன் 26, 1969)
நீங்கள் கல்லிலிருந்து செடி, பின் விலங்கு, பின்னர் மனிதன் என்ற நிலைகளுக்குப் போராடி உயர்ந்து வந்துள்ளீர்கள். மிருக நிலைக்குத் திரும்பி சரிந்து விடாதீர்கள்; ப்ரேமையின் புத்தொளியுடன் பிரகாசித்துக்கொண்டு தெய்வீக நிலைக்கு உயருங்கள். - பாபா