azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 30 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 30 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The Puranas and the epics teach the path of devotion and surrender. They ask that man should do every deed in a spirit of dedication. Allow the wind of doubt or the sun of despair to affect the pot of Ananda (bliss) you have filled, and it will evaporate quickly. But keep the pot in the cool waters of good company and good deeds; it can be preserved undiminished forever. Ananda too grows when you dwell on it in silence and recapitulate the circumstances which yielded it. That is why manana (recapitulation) is held so important as a part of spiritual effort. Like the child which throws off its toys and starts crying, you too must realise the paltriness of the toys of fame and fortune and call out for the Mother. The child feels that all else is trash before the love of the Mother and the blessedness of her presence. One should not aspire for anything less.( Divine Discourse, Jul 02,1966)
BE VIGILANT. WHEN CLEVERNESS DEGENERATES INTO CONCEIT, IT MAKES A MAN FORGET GOD WHO IS THE INNER MOTIVATOR. – BABA
புராணங்களும் இதிகாசங்களும் பக்தி மார்க்கத்தையும் சரணாகதியையும் போதிக்கின்றன. அவை, மனிதன் ஒவ்வொரு செயலையும் ஓர் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆற்றவேண்டும் என்று பணிக்கின்றன. நீங்கள் ஆனந்தத்தால் நிரப்பிய பானையை சந்தேகத்தின் காற்று அல்லது நம்பிக்கையின்மை எனும் சூரியன் பாதிக்குமாறு அனுமதித்தால், அது விரைவில் ஆவியாகிவிடும். ஆனால் நல்லோரின் நட்பு மற்றும் நற்செயல்கள் எனும் குளிர்ந்த நீரில் அந்தப் பானையை வைத்திருங்கள்; அதை என்றென்றும் குறையாமல் பாதுகாக்க முடியும். ஆனந்தத்தை நீங்கள் மௌனமாக சிந்தித்து, அதை அளித்த சூழ்நிலைகளை மீண்டும் நினைவுகூறும்போது ஆனந்தமும் கூட வளர்கிறது. அதனால் தான், மனனம் (மனதில் அசை போடுவது) என்பது, ஆன்மிக சாதனையின் மிக முக்கியமான அங்கமாக கருதப்படுகிறது. தனது பொம்மைகளைத் தூக்கி எறிந்துவிட்டு அழத்தொடங்கும் குழந்தையைப் போல, நீங்களும் கூட பெயர் மற்றும் புகழ் எனும் பொம்மைகளின் அற்பத்தனத்தை உணர்ந்து, தாயாகிய இறைவனை அறைகூவ வேண்டும். தாயின் அன்பு மற்றும் அவளுடைய அருகாமையின் அருளுக்கு முன் மற்ற அனைத்தும் குப்பை என்பதை குழந்தை உணர்ந்திருக்கிறது. ஒருவர் இதை விடக் குறைவான வேறு எதற்கும் ஆசைப்படக்கூடாது. (தெய்வீக அருளுரை, ஜூலை 02, 1966)
விழிப்புடன் இருங்கள். புத்திசாலித்தனம் அகந்தையாக
தரம் தாழ்ந்திடும்போது, அது ஒரு மனிதனை அந்தராத்ம உந்துசக்தியாக இருக்கும் இறைவனை மறக்க வைக்கிறது. – பாபா