azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 27 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 27 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Speech (Vak) has to be rigorously trained to avoid chatter and wandering prattle. Keep the tongue under control; don’t express all that you are prompted to say; and cut that inclination to the minimum. Silence will charge the battery and you can win it through a longer period of meditation. Be full of pure love, then your words will spread love. They will be sweet and soothing like balm to those who suffer. Om is the root of all sounds in all the worlds. The most effective method of cultivating love is to practise Namasmarana (remembrance of the Name). Or, better still, spend your time in Pranavopasana (repetition of Om). Om is the origin of Creation; it is the source, sustenance and strength. It is prana (life) of every being. Just as air forced through reeds of a harmonium produces the seven musical notes, Sa-ri-ga-ma-pa-da-ni, the one Om is at the root of all the sounds in all the worlds. Know its significance and practise its recitation!( Divine Discourse, Nov 23, 1966)
ALWAYS KEEP CHANTING THE NAME OF GOD AND YOU WILL NEVER BE ABLE TO FORGET HIM AT ANY TIME. - BABA
அரட்டை அடிப்பதையும் பிதற்றிக்கொண்டு திரிவதையும் தவிர்ப்பதற்கு, பேச்சிற்குத் (வாக்கு) தீவிர பயிற்சி அளிக்கப்பட வேண்டும். நாவைக் கட்டுக்குள் வைத்திருங்கள்; உங்களுக்குப் பேசத் தோன்றுவதை எல்லாம் பேசாமல், பேச்சை வெகுவாகக் குறைத்து விடுங்கள். மௌனம் உங்களுடைய சக்தியை அதிகரிக்கும்; நீங்கள் இதை நீண்ட நேர தியானத்தின் மூலம் பெற முடியும். பரிசுத்தமான பிரேமை நிறைந்தவர்களாக இருங்கள்; பின்னர் உங்களுடைய வார்த்தைகள் ப்ரேமையைப் பரப்பும். அவை வேதனைப்படுபவர்களுக்கு அருமருந்தாக, இனிமையாக, இதமாக இருக்கும். ‘ஓம்’ என்பது அனைத்து உலகங்களிலும் இருக்கும் எல்லா ஒலிகளுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. ப்ரேமையை வளர்த்துக் கொள்வதற்கான மிகச்சிறந்த முறை நாமஸ்மரணையே. அல்லது, அதற்கும் மேலாக, உங்களுடைய நேரத்தை ப்ரணவோபாஸனையில் (ஓம்காரத்தை திரும்பத் திரும்பச் சொல்வது) செலவிடுங்கள். ‘ஓம்’ என்பது படைப்பின் தோற்றுவாய் ஆகும்; அதுவே மூலாதாரம், வாழ்வாதாரம் மற்றும் சக்தி ஆதாரம் ஆகும். அதுவே எல்லா உயிரினங்களின் பிராணன். எவ்வாறு ஹார்மோனியத்தின் கட்டைகளின் வழியாகச் செலுத்தப்படும் காற்று ச-ரி-க-ம-ப-த-நி என ஸப்தஸ்வரங்களாக வெளிப்படுகிறதோ, அதைப்போன்று, ‘ஓம்’ ஒன்றுதான் அனைத்து உலகங்களிலும் இருக்கும் எல்லா ஒலிகளுக்கும் அடிப்படையாகும். அதன் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொண்டு, அதை உச்சரிப்பதைக் கடைப்பிடியுங்கள். (தெய்வீக அருளுரை, நவம்பர் 23, 1966)
எப்போதும் இறைநாமஸ்மரணை செய்து கொண்டே இருங்கள்;
எக்காலத்திலும் நீங்கள் ஒருபோதும் அவனை மறக்க முடியாது. - பாபா