azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 14 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 14 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

One has to understand what is meant by Akhanda Bhajan. There are two kinds of Bhajans - one is Khanda Bhajan and the other, Akhanda Bhajan. Khanda Bhajan is for a specific time, Bhajans held for limited period either in the morning or evening. On the other hand, Akhanda Bhajan involves constant contemplation on God in the morning, evening or even during night. It is constant contemplation on God during all three states - the waking, dream and deep sleep. It is “sarvada sarva-kaleshu sarvatra Hari-chintanam.” The divine name is highly potent. Each one of the several names of God has one type of power specific to it. If you wish to make good use of this power and derive lasting benefit out of it, you have to participate in Akhanda bhajan. (Divine Discourse, Nov 13,2007)
CEASELESS CONTEMPLATION OF THE LORD WILL GIVE CEASELESS TASTE OF NECTAR TO YOU. – BABA
அகண்ட பஜன் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பஜன்கள் இரண்டு விதமானவை - ஒன்று ‘கண்ட பஜன்’, மற்றொன்று ‘அகண்ட பஜன்’. கண்ட பஜன் என்பது காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு செய்யப்படுவதாகும். மாறாக, அகண்ட பஜன் என்பது, இறைவனை காலை, மாலை, ஏன் இரவிலும் கூட தொடர்ந்து ஸ்மரணை செய்வதாகும். இது, விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும், இடையறாது இறைவனை ஸ்மரணை செய்வதாகும். இதுதான், ‘’ஸர்வதா ஸர்வ காலேஷு ஸர்வத்ர ஹரி சிந்தனம்”. இறைவனது திருநாமம் மிகுந்த ஆற்றல் வாய்ந்தது. இறைவனது பல திருநாமங்கள் ஒவ்வொன்றும் அதற்கே உரித்தான ஒருவித சக்தி படைத்தவை. இந்த சக்தியை நன்கு பயன்படுத்தி, அதிலிருந்து நிலையான பலனைப் பெற நீங்கள் விரும்பினால், நீங்கள் அகண்ட பஜனையில் பங்கு கொண்டே ஆக வேண்டும். (தெய்வீக அருளுரை, நவம்பர் 13, 2007)
இறைவனை இடையறாது ஸ்மரணை செய்வது உங்களுக்கு அமிர்தத்தின் சுவையை இடையறாது அளிக்கும். - பாபா