azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 11 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 11 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Human birth is the rarest among all living beings (Jantunam Narajanma Durlabham). You cannot buy or borrow it. Human life is God’s gift. Make proper use of it by rendering service to society. Do not indulge in slander. Slander is the worst of sins; we find some people indulging in it always. It is nothing but the result of their innumerable sins acquired over past lives. Hastasya Bhushanam Dhanam, Satyam Kanthasya Bhushanam, Shrotrasya Bhushanam Sastram” (charity is the true ornament of hands, truth is the true ornament of the neck and listening to the sacred texts is the true ornament of the ears). Hands have been given to undertake sacred actions, not to fight with others. Why has God given you ears? You listen to vain gossip with rapt attention, but when it comes to listening to the glories of the Lord, your ears get clogged! Recognise the truth that ears are meant to listen to the glories of the Lord!( Divine Discourse, Apr 05, 2000)
DO NOT SLANDER OR ABUSE OTHERS OR YOUR OWN SELVES, AS WEAK, SINFUL, WICKED OR LOW; WHEN YOU DO SO, YOU ARE SLANDERING OR ABUSING ME, WHO RESIDES IN THEM AND IN YOU. - BABA
மனிதப் பிறவியே அனைத்து உயிரினங்களிலும் அரியதாகும் (ஜந்தூனாம் நரஜென்ம துர்லபம்). நீங்கள் அதை விலைக்கு வாங்கவோ அல்லது கடனாகப் பெறவோ முடியாது. மனிதப் பிறவி இறைவன் அளித்த பரிசாகும். சமுதாயத்திற்கு சேவை ஆற்றுவதன் மூலம் அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பழிதூற்றுவதில் ஈடுபடாதீர்கள். பழிதூற்றுவது என்பது பாவங்களில் மிகவும் மோசமானதாகும்; சிலர் எப்போதும் அதில் ஈடுபடுவதை நாம் காண்கிறோம். இது அவர்கள் முந்தைய பிறவிகளில் ஈட்டிய எண்ணற்ற பாவங்களின் விளைவே அன்றி வேறில்லை. ஹஸ்தஸ்ய பூஷணம் தானம், சத்யம் கண்டஸ்ய பூஷணம், ஸ்ரோத்ரஸ்ய பூஷணம் சாஸ்த்ரம் (தானமே கைகளுக்கு உண்மையான ஆபரணம், சத்யமே கழுத்திற்கு உண்மையான ஆபரணம், சாஸ்திரங்களைக் கேட்பதே காதுகளுக்கு உண்மையான ஆபரணம்). புனிதமான பணிகளை மேற்கொள்வதற்காக கைகள் கொடுக்கப்பட்டுள்ளனவே அன்றி, பிறருடன் சண்டையிடுவதற்காக அல்ல. இறைவன் உங்களுக்கு காதுகளை எதற்காக கொடுத்திருக்கிறான்? நீங்கள் வீண் வம்புகளை மிகுந்த கவனத்துடன் கேட்கிறீர்கள், ஆனால் இறைவனின் மகிமைகளைக் கேட்கும்போது உங்கள் காதுகள் அடைபட்டுப் போய்விடுகின்றன! காதுகள் இறைவனின் மகிமைகளைக் கேட்பதற்காகவே என்ற உண்மையை உணருங்கள்! (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 5, 2000)
உங்களையோ மற்றவர்களையோ, பலவீனமானவர்கள், பாவம் செய்தவர்கள், கொடியவர்கள், தாழ்வானவர்கள் என்றெல்லாம் பழிப்பது நிந்திப்பது கூடாது. நீங்கள் அவ்வாறு செய்யும்போது, அவர்களுள்ளும் உங்களுள்ளும் உறையும் என்னையே பழிக்கவும் நிந்திக்கவும் செய்கிறீர்கள். - பாபா