azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 31 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 31 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Abou Ben Adhem always offered the Sarva bhuta daya pushpam (the flower of compassion to all beings) to the Lord. Every day he used to go round the streets to serve the destitute, handicapped and return home late in the night. One night when he returned home, he found in his bedroom an angel writing something. When he asked her what she was writing, she replied that she was making a list of those who loved God. When he asked her if his name was there on that list, she replied in negative. The following night, when he returned home, he again found the angel writing something. He queried, "Mother, what are you writing now?" She said, "Son, I am writing the names of those who are dear to God." He wanted to know if his name figured in the list. She replied that his name was on the top of this list! The sum and substance of this story is, God is pleased when you serve your fellow human beings! (Divine Discourse Aug 22,2000)
THERE IS NOTHING ON EARTH OR BEYOND IT THAT IS EQUAL TO DIVINE LOVE. TO MAKE ALL ENDEAVOURS TO EARN THAT LOVE IS THE WHOLE PURPOSE AND MEANING OF HUMAN EXISTENCE. - BABA
அபு பென் ஆதம் எப்போதும் இறைவனுக்கு ‘ஸர்வ பூத தயா புஷ்பத்தையே’ (எல்லா உயிரினங்களிடமும் தயை கொண்டிருப்பது எனும் மலரை) அர்ப்பணித்து வந்தான். ஒவ்வொரு நாளும், அவன் வீதிகளில் சுற்றித் திரிந்து, ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோருக்குச் சேவை செய்து விட்டு, இரவில் வெகு நேரம் கழித்துத்தான் வீடு திரும்புவான். ஒரு நாள் அவன் வீடு திரும்பியபோது, அவனது படுக்கை அறையில் ஒரு தேவதை ஏதோ எழுதிக்கொண்டிருப்பதைக் கண்டான். அவன், என்ன எழுதிக்கொண்டு இருக்கிறாள் என்று அவளைக் கேட்டபோது, அவள், தான் இறைவனை நேசிப்பவர்களின் பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருப்பதாக பதிலளித்தாள். தன்னுடைய பெயர் அந்தப் பட்டியலில் இருக்கிறதா என்று அவன் அவளைக் கேட்டபோது, இல்லை என்று பதிலளித்தாள். அடுத்த நாள் இரவு அவன் வீடு திரும்பியபோது, அந்த தேவதை மீண்டும் எதையோ எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவன், "தாயே! இப்போது நீங்கள் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டான். அவள், "மகனே, இறைவனுக்கு மிகவும் பிடித்தமானவர்களின் பெயர்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்" என்று சொன்னாள். அவன், தனது பெயர் அந்தப் பட்டியலில் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள விரும்பினான். அவனுடைய பெயர்தான் அந்தப் பட்டியலில் முதலில் இருப்பதாக அவள் பதிலளித்தாள்! சக மனிதர்களுக்குச் சேவை செய்யும்போது தான் இறைவன் மகிழ்ச்சி அடைகிறான் என்பதே இக்கதையின் சாராம்சமாகும்! (தெய்வீக அருளுரை, ஆகஸ்ட் 22, 2000)
தெய்வீக ப்ரேமைக்கு ஈடான எதுவும் இவ்வுலகிலோ அல்லது அதற்கு அப்பாற்பட்டோ இல்லை. அந்த ப்ரேமையை அடைவதற்காக எல்லா முயற்சிகளையும் செய்வதே மனித வாழ்வின் முழுமையான குறிக்கோளும் அர்த்தமும் ஆகும். - பாபா