azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 29 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 29 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Arjuna asked Krishna, “One time, You say that we should renounce all karmas; another time, You say that the discipline of action (karma-yoga) has to be adopted. Tell me, which of these two paths is better?” Krishna answered thus: “Renunciation (sanyasa) and the discipline of karma both lead to the same goal of liberation, Oh Arjuna! But know this. There is greater joy in doing work than in giving up work. The real renunciant (sanyasin) is one who does not desire one thing or hate another.” The word renunciation can well be applied to work done without regard to success or failure, profit or loss, honour or dishonour, to any activity performed as an offering to the Lord. Mere inactivity announced by the saffron cloth and the shaved head is no renunciation at all. To deserve the name, one must have avoided the duality of joy and grief, of good and bad. So, better than the giving up of activity is the giving up of its fruits; it also yields greater joy. That is the best path.(Prasanthi Vahini Ch.21)
WHO IS A TRUE RENUNCIANT? ONE WHO RENOUNCES THE FRUITS OF HIS DESIRES AND ACTIONS CAN BE CALLED A TRUE RENUNCIANT. THERE LIES TRUE PEACE. - BABA
அர்ஜுனன், "ஒரு சமயம் நீ எல்லா கர்மாக்களையும் நாம் துறந்து விட வேண்டும் என்று கூறுகிறாய்; வேறொரு சமயம் கர்மயோகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுகிறாய். இந்த இரண்டு மார்க்கங்களிலும் எது சிறந்தது என்று எனக்குச் சொல்" என்று கிருஷ்ணரைக் கேட்டான். கிருஷ்ணர் இவ்வாறு பதிலளித்தார்: "துறவும் (சன்யாசம்), கர்ம மார்க்கமும், மோக்ஷம் என்ற ஒரே இலக்குக்குத்தான் இட்டுச் செல்கின்றன, ஓ அர்ஜுனா! ஆனால் இதைத் தெரிந்து கொள். கர்மாவை விட்டுவிடுவதை விட, கர்மாவை செய்வதில் தான் மிகுதியான இன்பம் இருக்கிறது. உண்மையான துறவி (சன்யாசி), ஒன்றை விரும்புவதோ அல்லது மற்றொன்றை வெறுப்பதோ இல்லை.” வெற்றி அல்லது தோல்வி, லாபம் அல்லது நஷ்டம், கெளரவம் அல்லது அவமானம் ஆகியவற்றைப் பற்றிக் கருதாது செய்யப்படும் செயலுக்கும், இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யப்படும் எந்தக் கர்மத்திற்கும் "துறவு" என்ற சொல் பொருந்தும். காவி உடை மற்றும் மழித்த தலையுடன் காட்சி அளித்து, செயல் எதுவும் ஆற்றாது சும்மா இருப்பது என்பது துறவே அல்ல. இந்தப் பெயருக்கு தகுதி பெற, ஒருவர் இன்பம் - துன்பம், நல்லவை - கெட்டவை என்ற இருமைகளைத் தவிர்த்திருக்க வேண்டும். எனவே, எந்தச் செயலையும் விட்டுவிடுவதை விட, அதன் பலன்களைத் துறப்பதே மேலானதாகும்; அது மிகுந்த மகிழ்ச்சியையும் தருகிறது. அதுவே மிகச்சிறந்த மார்க்கமாகும். (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-21)
உண்மையான துறவி யார்? தன் ஆசைகள் மற்றும் செயல்களின் பலன்களைத் துறப்பவரையே ஒரு உண்மையான துறவி என்று அழைக்க முடியும். அங்குதான் உண்மையான சாந்தி நிலவுகிறது. - பாபா