azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 09 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 09 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Navaratri is the festival to commemorate the victory of God over Evil. The Embodiment of Divine Power (Para-shakti), in its various manifestations, as Maha-Saraswati (Satwik), as Maha-Lakshmi (Rajasik), and as Maha-Kali (Tamasik) was able to overcome the forces of vice, wickedness and egoism, during the nine-days struggle and finally, on Vijayadashami (the Tenth Day commemorating victory), valedictory worship is done. It’s a festival of thanksgiving. Gratitude is divine; ingratitude is demonic. But, while offering homage of gratitude, you must also try to discover who was killed and who was saved and why. The six enemies of man are eating into his vitals, embedded in his own inner consciousness. They are the demons to be killed. They are lust (kama), anger (krodha), greed (lobha), attachment (moha), pride (mada) and malice (matsarya). They reduce man to the level of a demon. They have to be overpowered and transmuted, by the supreme alchemy of the Divine Urge.( Divine Discourse, Oct 12,1969)
WHEN YOU UNDERTAKE ACTIVITIES THAT PURIFY YOUR MIND,
PEACE WILL BECOME YOUR PROPERTY. - BABA.
நவராத்திரி, தீமையை தெய்வம் வெற்றி கொண்டதை நினைவுகூரும் பண்டிகையாகும். தெய்வீக சக்தியின் திருவுருவான பராசக்தியால், மஹாசரஸ்வதி (சாத்வீகம்), மஹாலக்ஷ்மி (ராஜசிகம்), மஹாகாளி (தாமஸிகம்) ஆகிய பல்வேறு வடிவங்களைத் தாங்கி, ஒழுக்கமின்மை, தீமை மற்றும் அகந்தையின் சக்திகளை ஒன்பது நாட்கள் போராடி இறுதியாக வெல்ல முடிந்தது; விஜயதசமி (வெற்றியை நினைவுகூரும் பத்தாவது நாள்) அன்று வழிபாடு நிறைவு செய்யப்படுகிறது. இது நன்றியை தெரிவிக்கும் ஒரு பண்டிகையாகும். நன்றியுணர்வே தெய்வீக இயல்பு; நன்றி மறத்தல் அரக்க குணமாகும். ஆனால், நீங்கள் நன்றி செலுத்தும்போது, யார் அழிக்கப்பட்டார், யார் எதற்காக காப்பாற்றப்பட்டார் என்பதையும் கண்டறிய நீங்கள் முயற்சிக்க வேண்டும். மனிதனின் ஆறு எதிரிகள் அவனது உள்ளுணர்வில் பொதிந்திருந்து, அவனது உயிராற்றலை உறிஞ்சுகின்றன. இவையே அழிக்கப்படவேண்டிய அரக்கர்களாகிய காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம் மற்றும் மாத்சர்யம் ஆகும். இவை மனிதனை ஒரு அரக்கனின் நிலைக்குத் தாழ்த்திவிடுகின்றன. தெய்வீக உந்துதல் எனும் மிக உயர்ந்த சித்தியினால் அவை அடக்கப்பட்டு, நல்மாற்றம் செய்யப்பட வேண்டும். (தெய்வீக அருளுரை, அக்டோபர் 12, 1969)
உங்களுடைய மனதை பரிசுத்தமாகும் பணிகளை நீங்கள் மேற்கொள்ளும்போது, சாந்தி உங்களுடைய உடைமையாகிவிடும். - பாபா