azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 07 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 07 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The Navaratri festival is celebrated all over India, but nobody seems to make any effort to comprehend the inner significance of this festival. The Hridaya (heart) is the abode of the Atma. No being can exist without the principle of Atma. God, who resides in all as the principle of Atma, has no specific name and form. But people attribute various names and forms to Him. He responds to the prayers of devotees in whatever form they worship Him. Hence, each one considers the form one worships to be superior to the other forms. It is a sign of ignorance to consider one form superior to the other. During the Navaratri celebrations, the Divine Mother is extolled in various names and forms. All names and forms are based on your feelings. God has no differences whatsoever. No one can comprehend the nature of Divinity. Actually, the principle of love that exists in all beings is the principle of Divinity. Love has no specific form. Divinity transcends name and form. Love is God. Live in love. Truth is God. Truth is all-pervasive.( Divine Discourse, Oct 5,2003)
IN ORDER TO EARN THE LOVE OF GOD, YOU SHOULD UNDERSTAND THAT GOD IS THE INDWELLER OF ALL BEINGS AND ACT ACCORDINGLY. - BABA
இந்தியா முழுவதும் நவராத்திரிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது, ஆனால் இந்த பண்டிகையின் உள்ளார்ந்த முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள யாரும் எந்த முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை. ஹ்ருதயமே (இதயம்) ஆத்மாவின் உறைவிடமாகும். ஆத்மதத்துவம் இன்றி எந்த உயிரினமும் இருக்க முடியாது. எல்லாவற்றிலும் ஆத்மதத்துவமாக உறையும் இறைவனுக்கு ஒரு குறிப்பிட்ட நாமமோ ரூபமோ இல்லை. ஆனால் மனிதர்கள் அவனுக்கு பல்வேறு நாம, ரூபங்களை அளிக்கிறார்கள். பக்தர்கள் எந்த ரூபத்தில் அவனை வழிபட்டாலும், இறைவன் அவர்களுடைய பிரார்த்தனைகளுக்கு அருள்பாலிக்கிறான். எனவே, ஒவ்வொருவரும் தாங்கள் வழிபடும் ரூபமே, பிற ரூபங்களை விட உயர்ந்தது என்று கருதுகிறார்கள். ஒரு ரூபம், மற்றொன்றை விட உயர்ந்தது என்று கருதுவது வெறும் அறியாமையின் அடையாளம். நவராத்திரிப் பண்டிகைக் கொண்டாட்டங்களின் போது, தேவி பல்வேறு நாம ரூபங்களில் போற்றப்படுகிறாள். அனைத்து நாம ரூபங்களும் உங்களுடைய உணர்வுகளைப் பொறுத்தவையே. இறைவனுக்கு எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை. இறைவனுடைய இயல்பை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. உண்மையில், அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் ப்ரேம தத்துவமே, தெய்வ தத்துவம் ஆகும். ப்ரேமைக்கு ஒரு குறிப்பிட்ட ரூபம் கிடையாது. தெய்வீகம் நாம ரூபங்களுக்கு அப்பாற்பட்டது. ப்ரேமையே இறைவன். ப்ரேமையில் வாழுங்கள். சத்தியமே இறைவன். சத்தியம் எங்கும் நிறைந்தது. (தெய்வீக அருளுரை, அக்டோபர் 5, 2003)
இறைவனுடைய ப்ரேமையைப் பெறுவதற்கு, இறைவனே எல்லா உயிரினங்களிலும் உறைகிறான் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். - பாபா