azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 06 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 06 Oct 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Why does the Divine attract? Is it to deceive or mislead? No! It is to transform, reconstruct and reform - this is a process called samskara. What is the purpose of the reconstruction? To make the person useful and serviceable for society, to efface his ego, and to affirm in him the unity of all beings in God. The person who has undergone samskara becomes a humble servant of those who need help. This is the stage of paropakara. Service of this kind done with reverence and selflessness prepares man to realise the One that pervades the many. The last stage is sakshatkara. The scriptures (Vedas) proclaim that Immortality (the stage when one is merged in the Birthless, Deathless, Universal Entity), is feasible through renunciation and detachment only, and not through rituals, progeny or wealth. When man renounces selfish desires, his love expands unto the farthest regions of the Universe until he becomes aware of the cosmic love that feeds all the four processes mentioned above.( Divine Discourse Nov 23,1976)
WHEN THE MIND IS PURE, UNSELFISH AND UNWAVERING, THE DIVINE APPEARS IN ALL HIS PURITY AND FULLNESS. - BABA
தெய்வீகம் ஏன் நம்மை ஈர்க்கிறது? நம்மை ஏமாற்றவா? தவறான பாதையில் திருப்பவா? இல்லை! நல்மாற்றம், புனரமைப்பு மற்றும் சீர்திருத்தம் செய்வதற்காகவே - இந்த முறைதான் ஸம்ஸ்காரம் என அழைக்கப்படுகிறது. புனரமைப்பதன் நோக்கம் என்ன? மனிதனை சமுதாயத்திற்குப் பயனுள்ளவனாகவும், சேவையாற்றுபவனாகவும் ஆக்கி, அவனது அகந்தையை அழித்து, இறைவனுள் அனைத்து உயிரினங்களும் ஒன்றிணைந்திருப்பதை அவனிடம் உறுதி செய்வதற்காகத் தான். இத்தகைய ஸம்ஸ்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட ஒருவர், யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களின் பணிவான சேவகன் ஆகிவிடுகிறார். இந்த நிலையே பரோபகாரமாகும். இப்படிப்பட்ட பயபக்தியுடன் கூடிய தன்னலமற்ற சேவை, பலவற்றில் ஊடுருவி இருக்கும் ஒரே பரமாத்மாவை மனிதன் உணர்வதற்கு தயாராக்குகிறது. இறுதியான நிலை சாக்ஷாத்காரம் என்பதாகும். அமரத்துவம் என்பது பிறப்பு இறப்பற்ற ப்ரபஞ்சமயமான பரமாத்மாவுடன் ஒருவர் இரண்டறக் கலக்கும் நிலை. இந்நிலையை, தியாகம் மற்றும் பற்றின்மையினால் மட்டும் தான் அடைய முடியுமே தவிர, சடங்குகள், சந்ததி அல்லது செல்வத்தால் அல்ல என்று வேதங்கள் பறைசாற்றுகின்றன. மனிதன் சுயநலமான ஆசைகளை விட்டுவிடும்போது, அவன் பிரபஞ்சமயமான ப்ரேமையைப் பற்றி உணரும் வரை, அவனது ப்ரேமை பிரபஞ்சத்தின் மிகுந்த தொலைவில் இருக்கும் பகுதிகளுக்கும் விரிவடைகிறது. இந்த பிரபஞ்சமயமான ப்ரேமையே மேற்குறிப்பிட்டுள்ள நான்கு செயல்முறைகளுக்கும் ஊட்டமளிக்கிறது. (தெய்வீக அருளுரை, நவம்பர் 23, 1976)
மனம் தூய்மையாக, சுயநலமின்றி, தடுமாற்றமின்றி இருக்கும்போது, தெய்வீகம் பரிசுத்தத்தோடு பூரணமாக தோன்றுகிறது. - பாபா