azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 27 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 27 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

You must recognise the fundamental truth, i.e., the principle of Atma. It is within you. It is possible to know this only through the intellect because it has the capacity to discriminate. If you want to partake an orange, you have to peel out the bitter rind. Even the monkey peels out the skin of a banana before partaking it. Likewise, the intellect should give up evil and accept the good. What is the use of human birth if man acts in the same manner as a monkey or a buffalo? There is another lesson to be learnt even from buffaloes and cows. They graze in the fields without wasting a minute and masticate leisurely whatever they have eaten. Likewise, whenever you come across anything good, accept it without delay. Later on, contemplate on it and assimilate it.(Divine Discourse,Jan 14,2002)
THE CHIEF QUALITY THAT DISTINGUISHES A MAN FROM AN ANIMAL IS WISDOM - THE POWER OF DISCRIMINATION AS TO WHAT IS PERMANENT AND WHAT IS TRANSIENT. - BABA
நீங்கள் அடிப்படை சத்தியத்தை, அதாவது ஆத்ம தத்துவத்தை உணர வேண்டும். அது உங்களுள்ளேயே இருக்கிறது. இதை புத்தியின் மூலமே தெரிந்து கொள்ள முடியும், ஏனெனில், அதற்குத்தான் பகுத்தறியும் திறன் உள்ளது. நீங்கள் ஒரு ஆரஞ்சுப்பழத்தைச் சாப்பிட வேண்டும் என்றால், கசப்பான அதன் தோலை நீங்கள் உரிக்க வேண்டும். ஒரு குரங்கு கூட, வாழைப்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு அதன் தோலை உரிக்கிறது. அதைப் போலவே, புத்தியும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு குரங்கு அல்லது எருமைமாடு நடந்து கொள்வதைப் போல மனிதனும் நடந்துகொண்டால், மனிதப்பிறவியினால் என்ன பயன்? எருமை மற்றும் பசு மாடுகளிடமிருந்தும் கூட கற்றுக்கொள்ள வேண்டிய மற்றுமொரு பாடம் இருக்கிறது. ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்காமல் வயல்களில் மேய்ந்து விட்டு, அவை உண்டதை நிதானமாக அசைபோடும். அதைப் போலவே, ஏதேனும் நல்லவற்றை நீங்கள் எப்போது கண்டாலும் தாமதமின்றி அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் பின் அவற்றைப் பற்றி சிந்தித்து, அவற்றை கிரஹித்துக் கொள்ளுங்கள். (தெய்வீக அருளுரை, ஜனவரி 14, 2002)
எது நிலையானது, எது தாற்காலிகமானது என்பதை பகுத்தறியும் ஆற்றலான ஞானமே ஒரு மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பிரதான குணமாகும். – பாபா