azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 24 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 24 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Mankind can win happiness only through unity, and not through diversity. If thoughts and feelings run along the routes of distinction and division, happiness is beyond reach and peace cannot be experienced. Without peace, you have no chance to be joyful. Consider the one indivisible ocean as the goal. Why does the direction of flow of the river matter? Why does the name matter? The rivers merge in the self-same sea, don’t they? Spiritual aspirants and devotees who adopt the path of yoga, the path of devotion, or the path of peace, dharma, truth, and love reach the ocean of grace at last, and name and form fade away; distinctions disappear. They are blessed with the merger in the sea of peace. So, unity must always be kept before the eye. Never nourish ideas of difference, of distinct names and forms of the Lord, of divergent paths. Such ideas are obstacles to the attainment of bliss. Avoid these obstacles; develop equal vision.( Prasanthi Vahini,Ch 14)
JUST AS THE RIVERS FLOW INTO THE SEA AND MERGE IN IT, ALL SECULAR KNOWLEDGE FULFILS ITSELF IN SPIRITUAL KNOWLEDGE. - BABA.
மனிதகுலம் ஒற்றுமையில் தான் சந்தோஷத்தைப் பெற முடியும், வேற்றுமையில் அல்ல. எண்ணங்களும் உணர்வுகளும் வேறுபாடு மற்றும் பிரிவின் பாதைகளில் செல்லுமானால் மகிழ்ச்சி கைக்கு எட்டாததாகி விடும், தவிர சாந்தியை அனுபவிக்க முடியாது. சாந்தி இல்லையேல், உங்களுக்கு சந்தோஷமாக இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. பிரிக்கமுடியாத கடலை குறிக்கோளாக எடுத்துக்கொள்ளுங்கள். நதி பாயும் திசைக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது? அதன் பெயருக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது? அனைத்து நதிகளும் ஒரே கடலில்தான் இரண்டறக் கலக்கின்றன, இல்லையா? யோக மார்க்கம், பக்தி மார்க்கம் அல்லது சாந்தி, தர்மம், சத்யம் மற்றும் ப்ரேமை மார்க்கம் ஆகியவற்றைப் பின்பற்றிச் செல்லும் ஆன்மிக சாதகர்களும் பக்தர்களும், இறுதியாக இறையருள் எனும் கடலை அடைகின்றனர்; நாம ரூபங்கள் மறைந்து விடுகின்றன; வேறுபாடுகளும் மறைந்து விடுகின்றன. சாந்தி எனும் கடலில் இரண்டறக் கலக்கும் அருளை அவர்கள் பெறுகிறார்கள். எனவே, எப்போதும் ஒற்றுமையை நம் பார்வையில் வைத்திருக்க வேண்டும். வேற்றுமைகள், இறைவனின் தனித்தன்மையான நாம ரூபங்கள், மாறுபட்ட மார்க்கங்கள் ஆகியவற்றைப் பற்றிய கருத்துகளை ஒருபோதும் ஆதரித்து வளர்க்காதீர்கள். இப்படிப்பட்ட கருத்துகள் ஆனந்தத்தைப் பெறுவதற்கு தடைகளாக விளங்குகின்றன. இந்தத் தடைகளைத் தவிர்த்து, சமதிருஷ்டியை வளர்த்துக் கொள்ளுங்கள். (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-14)
எவ்வாறு நதிகள் கடலை நோக்கிப் பாய்ந்து அதில் இரண்டறக் கலக்கின்றனவோ, அவ்வாறே அனைத்து உலகியலான அறிவும் ஆன்மிக ஞானத்தில் பூரணத்துவம் பெறுகின்றன. - பாபா