azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 23 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 23 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Worldly benefits come and go. They are not the things which you should pray for. Seek what is eternal. Pray for God's love and bliss. Seek to realise your Divinity. Then you will experience the Divine in the entire cosmos. You will experience the bliss that fills the universe. When you see the world with the eye of divine bliss, you will find bliss everywhere. If there is hatred in your vision, you will see hatred everywhere. Hence, to start with, change your vision. Look at the world with the vision of peace, love and compassion. Then the whole world will appear loving and peaceful. When your heart is filled with love, you will experience God in the entire cosmos. See Divine in everyone. Eschew hatred and ill-will. After years of devotion, many still lack a broad outlook and an all-encompassing love. Embodiments of love, promote love in your hearts incessantly - the love that is immortal and infinite!( Divine Discourse Apr 07,1997)
WHEN THE HEART IS FILLED WITH LOVE, THE WHOLE WORLD BECOMES LOVEABLE. -BABA
உலகியலான பலன்கள் வரும், போகும். நீங்கள் பிரார்த்திக்க வேண்டியது இவற்றிற்காக அல்ல. நிரந்தரமானவற்றை நாடுங்கள். இறைவனுடைய ப்ரேமை மற்றும் ஆனந்தத்திற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுடைய தெய்வீகத் தன்மையை உணர முற்படுங்கள். பின்னர் நீங்கள் ப்ரபஞ்சமனைத்திலும் இறைவனை அனுபவிப்பீர்கள். ப்ரபஞ்சத்தை நிறைக்கும் ஆனந்தத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். தெய்வீக ஆனந்தக் கண் கொண்டு நீங்கள் உலகைப் பார்க்கும்போது, நீங்கள் எங்கும் ஆனந்தத்தையே காண்பீர்கள். உங்களுடைய பார்வையில் த்வேஷம் இருக்குமானால், நீங்கள் எங்கும் த்வேஷத்தையே காண்பீர்கள். எனவே முதலில், உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள். சாந்தி, ப்ரேமை மற்றும் கருணையுடனான கண்ணோட்டத்துடன் உலகைப் பாருங்கள். பின்னர் உலகனைத்தும் நேசமுள்ளதாகவும், அமைதியானதாகவும் தோன்றும். உங்கள் இதயம் ப்ரேமையால் நிறைந்திருக்கும் போது, ப்ரபஞ்சமனைத்திலும் நீங்கள் இறைவனை அனுபவிப்பீர்கள். ஒவ்வொருவரிலும் தெய்வீகத்தைக் காணுங்கள். வெறுப்பு மற்றும் கெட்ட எண்ணத்தை தவிர்த்து விடுங்கள். பல வருடங்கள் பக்தியுடன் இருந்த பிறகும், பரந்த நோக்கும், அனைவரையும் அரவணைக்கும் ப்ரேமையும் பலருக்கு இருப்பதில்லை. ப்ரேமையின் திருவுருவங்களே, உங்கள் இதயங்களில் அழிவற்ற, அளவில்லாத அந்தப் ப்ரேமையை இடையறாது மேம்படுத்துங்கள். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 07, 1997)
இதயம் ப்ரேமையால் நிறையும் போது, உலகமனைத்தும் நேசிக்கப்படக்கூடியதாக ஆகி விடுகிறது. - பாபா