azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 21 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 21 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

From today try to cleanse your heart of whatever impurities there may be in it! How is this to be done? One, by meditating on God. Secondly, by service to society. By these two alone, purity of the heart is achieved. If you secure the love of God, you can secure anything. There is love in you. Use it to win the love of God. Pray for God's love and bliss. Embodiments of love! Many pray to God all over the world. They pray for the realisation of worldly desires of one kind or another. This is not the right kind of prayer. You should pray to God for the grace of His love. That love is everlasting. It is infinite. God has another attribute. He is the embodiment of bliss. He is Sat-Chit-Aananda (Being-Awareness-Bliss). Pray to God to confer that bliss on you. God's bliss is boundless and everlasting. All mundane pleasures are transient and ephemeral.( Divine Discourse Apr 07,1997)
A TRUE DEVOTEE IS ONE, WHO PRAYS TO GOD FOR HIS LOVE AND BLISS. - BABA
இன்று முதல் உங்கள் இதயத்தில் உள்ள அசுத்தங்கள் எதுவாக இருந்தாலும் அதைத் தூய்மைப்படுத்த முயற்சி செய்யுங்கள்! இதை எவ்வாறு செய்வது? ஒன்று, இறைவனை தியானிப்பதன் மூலம். இரண்டாவது சமுதாயத்திற்கு சேவை ஆற்றுவது. இந்த இரண்டின் மூலமாக மட்டுமே இதயத்தூய்மையைப் பெற முடியும். நீங்கள் இறைவனுடைய ப்ரேமையைப் பெற்றுவிட்டால், எதை வேண்டுமானாலும் நீங்கள் அடைய முடியும். உங்களுள் ப்ரேமை இருக்கிறது. அதைப் பயன்படுத்தி இறைவனின் ப்ரேமையை வெல்லுங்கள். இறைவனுடைய ப்ரேமை மற்றும் ஆனந்தத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். ப்ரேமையின் திருவுருவங்களே! உலகெங்கும் பலர் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். ஏதோ ஒருவிதமான உலக ஆசைகள் அல்லது மற்றவை நிறைவேறுவதற்காக அவர்கள் பிரார்த்திக்கிறார்கள். இது சரியான பிரார்த்தனை அல்ல. நீங்கள் இறைவனிடம் அவனுடைய ப்ரேமையின் அருளுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அந்த ப்ரேமை தான் என்றும் நிலைத்திருப்பது. அது அளவில்லாதது. இறைவனுக்கு மற்றொரு குணம் உண்டு. அவன் ஆனந்தத்தின் திருவுருவம். அவன் சச்சிதானந்தன். அந்த ஆனந்தத்தை உங்களுக்கு அளிக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இறைவனுடைய ஆனந்தம் எல்லையற்றதும், என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். உலகியலான சுகங்கள் அனைத்தும் நிலையற்றவை, தாற்காலிகமானவை. (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 7, 1997)
இறைவனிடம் அவனது ப்ரேமை மற்றும் ஆனந்தத்திற்காகப் பிரார்த்தனை செய்பவனே உண்மையான பக்தன். – பாபா