azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 19 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 19 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Liberation is samadhi or peace attained through the spiritual discipline of the cleansing of the inner person — the spiritual discipline of negating the impressions that one gets through seeing, hearing, reading, learning, doing, and getting things done. People suffering unbearable physical agony don’t take any interest in entertainment, do they? Similarly, a sincere seeker and devotee can have no interest in the world’s theatre of objective pleasure and petty passion. These inferior desires have first to be renounced and checked. They lie at the root of all misery. Stabilising oneself in detachment is itself the highest austerity (tapas), the most exacting vow. One has to be ever alert in that austerity and strive again and again. Like a child endeavouring to walk, you might toddle a few steps, falter, and fall, but like the child, you must lift yourself up with a smile and start again.(Prasanthi Vahini Ch.13)
Analyse every object and discover the cheapness and hollowness of each. Then, genuine vairagya (detachment) will be planted in your heart. - BABA
மோக்ஷம் என்பது ஆன்மிக சாதனையின் மூலம் அந்தராத்மாவை பரிசுத்தப்படுத்துவதால் பெறப்படும் சமாதி நிலை அல்லது சாந்தியாகும் - இங்கு ஆன்மிக சாதனை என்பது ஒருவர் காண்பது, கேட்பது, படிப்பது, கற்பது, செய்வது, மேலும் செயல்களை செய்விப்பது போன்றவற்றால் ஒருவர் பெறும் பதிவுகளை ஒதுக்கிவிடுவதை குறிப்பிடுவதாகும். தாங்க முடியாத உடல் வேதனையால் தவிக்கும் மனிதர்கள், கேளிக்கைகளில் நாட்டம் கொள்வதில்லை, அல்லவா? ஒரு சிரத்தையான ஆன்மிக சாதகர் மற்றும் பக்தருக்கு, பொருளின்பம் மற்றும் சிற்றின்ப உணர்வுகள் நிறைந்த உலக அரங்கின் மீது எவ்வித நாட்டமும் இருக்க முடியாது. முதலில் இந்த கீழ்த்தரமான ஆசைகளை விடுத்து, தடுக்கப்பட வேண்டும். இவையே அனைத்து துன்பங்களின் ஆணிவேராகும். பற்றின்மையில் ஒருவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதே மிக உயர்ந்த தவமும், மிகவும் கடினமான விரதமும் ஆகும். இந்தத் தவத்தில் ஒருவர் எப்போதும் விழிப்புடன் இருந்து, மீண்டும் மீண்டும் பாடுபட வேண்டும். ஒரு சிறு குழந்தை நடக்க முற்படுவது போல, நீங்கள் சற்று தளிர்நடை நடந்து தட்டுத் தடுமாறி விழுந்துவிடலாம்; ஆனால் அந்தக் குழந்தையைப் போல, நீங்கள் புன்னகையுடன் மேலே எழுந்து, மீண்டும் தொடர வேண்டும். (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-13)
ஒவ்வொரு பொருளையும் ஆராய்ந்து, அதன் அற்பத்தனத்தையும் வெற்றுத் தன்மையையும் கண்டுணருங்கள். பிறகு, உண்மையான வைராக்யம் அதாவது பற்றின்மை உங்கள் இதயத்தில் விதைக்கப்படும். - பாபா