azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 18 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 18 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Wisdom (jnana) is the precious ambrosia gathered from all sources of knowledge. It’s the sweet sustaining butter churned and collected from scriptures. Wisdom isn’t the capacity to discriminate and declare, “This is flat, this is round”, “or this is a hill, a house”, and so on. These are common knowledge! Next, we may have good knowledge (sujnana), when one distinguishes between right and wrong, or good and bad, or when you discover that a particular activity is for my betterment and others. Both wisdom and good knowledge are confined to one’s intellect! There is a higher wisdom when the heart is transformed by loyalty to truth, non-violence, and compassion. A person with this higher wisdom understands their ownself and their kinship with the cosmos and its Creator. The person lives in accordance with that understanding, without doubt or disharmony. The yardstick for higher wisdom is dharma (righteousness). The more dharma is put into practice, the more one gets rooted in the higher wisdom (Sathya Sai Vaahini Ch.20).
DISCRIMINATION AND DETACHMENT ARE THE FIRST AND THE SECOND STEPS THAT MAN HAS TO TAKE IN ORDER TO REACH THE ETERNAL ATMIC TRUTH. - BABA
ஞானம் என்பது அறிவின் அனைத்து ஆதாரங்களிலிருந்து சேகரிக்கப்படும் விலைமதிப்புள்ள அமிர்தமாகும். வேதங்களைக் கடைந்து எடுக்கப்படும் இனிமையான ஊட்டமளிக்கும் வெண்ணெய் ஆகும். ஞானம் என்பது, "இது தட்டையானது, இது உருண்டையானது" அல்லது "இது ஒரு குன்று, வீடு" என்றெல்லாம் பகுத்தறிந்து கூறுவதற்கான திறன் அல்ல. இவையெல்லாம் பொது அறிவே! அடுத்ததாக, சரியானவை - தவறானவை அல்லது நல்லவை - கெட்டவை என்று ஒருவர் பகுத்தறிவது, அல்லது ஒரு குறிப்பிட்ட செயல்பாடு என்னுடைய மற்றும் பிறருடைய முன்னேற்றத்திற்கானது என்று கண்டறிவது - போன்றவற்றுக்கான நல்லறிவு (சுக்ஞானம்) நம்மிடம் இருக்கலாம். ஞானம், நல்லறிவு - இவ்விரண்டும் ஒருவரின் புத்திக்கு உட்பட்டவையே! சத்தியம், அஹிம்சை மற்றும் கருணை ஆகியவற்றை இதயம் பற்றி ஒழுகுவதால், அது நல்மாற்றம் அடையும்போது உயர்ஞானம் கிடைக்கிறது. இந்த உயர்ஞானம் பெற்ற ஒருவர், தங்களையும், இந்த பிரபஞ்சம் மற்றும் அதைப் படைத்தவனுடனான அவர்களுடைய உறவையும் புரிந்து கொள்கிறார். அம்மனிதர் அப்படிப்பட்ட புரிதலுடன், சந்தேகமோ, இசைவின்மையோ இன்றி வாழ்கிறார். இந்த உயர்ஞானத்தின் அளவுகோல் தர்மமே. எந்த அளவிற்கு தர்மம் கடைப்பிடிக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு ஒருவர் உயர்ஞானத்தில் வேரூன்றி இருப்பார். (சத்ய சாய் வாஹினி, அத்தியாயம்-20)
பகுத்தறிவும், பற்றின்மையும் நிரந்தரமான ஆத்ம சத்தியத்தை மனிதன் சென்றடைவதற்கான முதலாவது மற்றும் இரண்டாவது படிகளாகும். - பாபா